ஈகோஸ்ப்பொட்டாமி சமர் என்பது பண்டைய கிரேக்கத்தில் கிமு 405 இல் நடந்த ஒரு கடற்படை சமராகும். மேலும் இது பெலோபொன்னேசியப் போரின் கடைசி பெரிய போராகும். இந்தப் போரில், லைசாந்தரின் தலைமையிலான எசுபார்த்தன் கடற்படையானது ஏதெனியன் கடற்படையை அழித்தது. ஏதென்சு தானியங்களை இறக்குமதி செய்யவோ அல்லது கடலில் தடையின்றி தன் பேரரசின் பகுதிகளுடன் தொடர்பு கொள்ளவோ முடியாத நிலை ஏற்பட்டதால் இந்தப் போருடன் பெலோபொனிசியப் போர் முடிவுக்கு வந்தது. மேலும்...
1782 – சர் எட்வர்டு இயூசு தலைமையிலான பிரித்தானிய அரச கடற்படையும் சர் எக்டர் மன்ரோ தலைமையிலான தரைப்படையும் இணைந்து திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றின. ஆகத்து 29 இல் இக்கோட்டையை அவர்கள் பிரான்சிடம் இழந்தனர்.
வியட்நாம் கிராமம் ஒன்றில் ஊதுபத்திக் கரைசலில் தோய்த்த பிறகு, ஊதுபத்திகள் உலர வைக்கப்படுகின்றன. ஊதுபத்தி பெரும்பாலும் இயற்கை பொருட்களாலும் சிறிது செயற்கை வாசனை நீர்மங்களாலும் சேர்ந்து செய்யப்பட்ட கலவையை ஆகும்.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,70,768 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.