Content-Length: 113187 | pFad | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D

வண்ண நூல் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

வண்ண நூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழந்தைகளின் வண்ண நூல் கார்பீல்ட் கூஸ் (1953)

வண்ண நூல் (பிரித்தானிய ஆங்கிலம்: colouring-in book, colouring book, or coloring page) என்பது வண்ணத்தீட்டுக்கோல், வண்ண கரிக்கோல், குறிப்பான் எழுதுகோல், வண்ணப்பூச்சு அல்லது பிற கலை ஊடகங்களைப் பயன்படுத்தி வண்ணத்தைச் சேர்க்க விரும்பும் வரிக் கலையைக் கொண்ட ஒரு வகை நூலாகும். பாரம்பரிய வண்ண நூல்கள் மற்றும் வண்ணப் பக்கங்கள் காகிதம் அல்லது அட்டையில் அச்சிடப்படுகின்றன. சில வண்ண நூல்கள் துளையிடப்பட்ட விளிம்புகளைக் கொண்டிருப்பதால் அவற்றின் பக்கங்களை புத்தகங்களிலிருந்து அகற்றி தனித் தாள்களாகப் பயன்படுத்தலாம். மற்றவை ஒரு மொழிபு வரியை உள்ளடக்கியிருக்கலாம்.தற்போது பல குழந்தைகளுக்கான வண்ண நூல்கள் பரவலாக அறியப்படும் வரைகலை கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளன. அவை பெரும்பாலும் இயக்கப் படங்களுக்கான விளம்பரப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. வண்ணப் புத்தகங்கள் புள்ளி தொடுத்தல், புதிர்வழி மற்றும் பிற புதிர்களை இணைத்தல் போன்ற பிற செயல்பாடுகளையும் உள்ளடக்கியிருக்கலாம். சிலர் ஒட்டுத் தாள் பயன்படுத்துவதையும் இணைத்துக்கொள்கிறார்கள்.

வரலாறு

[தொகு]
தி லிட்டில் ஃபோல்க்ஸ் வண்ண நூல், 1879

"கலையின் ஜனநாயகமயமாக்கல்" எனும் செயல்முறையின் ஒரு பகுதியாக வண்ண மற்றும் ஓவிய நூல்கள் அமெரிக்காவில் வெளிவந்தன, இது பிரித்தானியக் கலைஞர் ஜோசுவா ரெனால்ட்ஸ் மற்றும் சுவீடியக் கல்வியாளர் யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி மற்றும் அவரது மாணவர் பிரெட்ரிக் புரோபல் ஆகியோரின் தொடர் விரிவுரைகளால் ஈர்க்கப்பட்டது. பல கல்வியாளர்கள், எந்த விதமான பின்புலங்களில் இருந்து வந்தர்வர்களாக இருந்தாலும் கலைக் கல்வியினைப் பயிலுவதன் மூலம் கருத்தியல் புரிதலை மேம்படுத்துதல், அவர்களின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் குழந்தைகளின் ஆன்மீக வளர்ச்சியினை எட்டுதல் ஆகியவற்றினை மேற்கொள்ள இயலும் என நம்பினர். [1]1880 களில், கேட் கிரீன்அவேயுடன் இணைந்து தி லிட்டில் ஃபோல்க்ஸ் ஓவிய நூலினைத் தயாரித்த போது, மெக்லௌலின் சகோதரர்கள் வண்ண நூலினை உருவாக்கியதாகக் கருதப்படுகிறது. 1920கள் வரை, மில்டன் பிராட்லி நிறுவனத்தின் ஒரு பகுதியாக இணையும் வரை மெக்லௌலின் பிரதர்ஸ் வண்ண நூல்களை வெளியிட்டனர்.

கல்வி பயன்பாடுகள்

[தொகு]
குழந்தைகளுக்கான வண்ண நூல்

பல்வேறு காரணங்களுக்காக சிறு குழந்தைகளுக்கு வண்ணமயமான நூல்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, குழந்தைகள் மற்ற கற்றல் முறைகளைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் புத்தகங்களை வண்ணமயமாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்; வெறும் வார்த்தைகளை விட படங்கள் மறக்க முடியாததாக இருக்கலாம்.[சான்று தேவை] சில ஆய்வுகளின்படி, வண்ணமயமாக்கல் ஓவியத்தில் படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. [2]

சான்றுகள்

[தொகு]
  1. "Drawn to Art: Art Education and the American Experience, 1800–1950". absolutearts.com. 2003. பார்க்கப்பட்ட நாள் March 15, 2012.
  2. research

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ண_நூல்&oldid=3763068" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy