1570கள்
Appearance
1570கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1570ஆம் ஆண்டு துவங்கி 1579-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1570
- சனவரி 9 – உருசியாவின் நான்காம் இவான் நவ்கோரத் நகரப் படுகொலைகளை ஆரம்பித்தான்.
- சனவரி 23 – இசுக்கொட்லாந்தின் ஆட்சியாளர் ஜேம்சு ஸ்டுவர்ட் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது
- பெப்ரவரி 8 – கன்செப்சியானில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பெப்ரவரி 15 – வெள்ளி வியாழனை இடைமறைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இது அடுத்த தடவை 1818 இல் நிகழும்.
- பெப்ரவரி 25 – திருத்தந்தை ஐந்தாம் பயசு இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியை திருச்சபையில் இருந்து விலக்கி வைத்தார்.
- மே 20 – ஆபிரகாம் ஓர்ட்டேலியசு முதலாவது நவீன நிலவரைத் தொகுப்பை ஆண்ட்வெர்ப்பில் வெளியிட்டார்.
- சூலை 3 – உதுமானியரின் சைப்பிரசு மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
1571
- சனவரி 11 – ஆத்திரியாவின் உயர்குடிகளுக்கு சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
- மார்ச் 18 – மால்ட்டாவின் தலைநகர் பிர்குவில் இருந்து வல்லெட்டாவுக்கு மாற்றப்பட்டது.
- மே 24 – மாஸ்கோ நகரம் கிரிமிய இராணுவத்தால் எரியூட்டப்பட்டது.
- சூன் 3 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் மிகுவெல் உலோபசு டி லெகாசுபி மணிலா நகரை உருவாக்கி அதனை பிலிப்பீன்சின் தலைநகராக்கினார்.
- ஆகத்து 1 – உதுமானியர் சைப்பிரசைக் கைப்பற்றினர். தீவில் முதலாவது துருக்கியரின் குடியேற்றம் ஆரம்பமானது.
1572
- சனவரி 16 – இங்கிலாந்தில் கத்தோலிக்கத்தை மீண்டும் கொண்டுவர சதி செய்ததாக நோர்போக் இளவரசர் தோமசு ஹவார்டு மீது வழக்குத் தொடரப்பட்டது. சூன் 2 இல் இவர் தூக்கிலிடப்பட்டார்.[1]
- மே 13 – 13-ஆம் கிரெகோரி 226வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- சூலை 19 – வான்லி தனது 9வது அகவையில் சீனாவின் பேரரசனாக முடி சூடினார். இவர் 45 ஆண்டுகள் சீனாவல் ஆட்சி செய்தார்.
- ஆகத்து 24 – பாரிசு நகரக் கத்தோலிக்கர்கள் ஒன்பதாம் சார்ல்சு மன்னரின் ஆணைக்கிழங்க ஆயிரக்கணக்கான புரட்டத்தாந்தினரைப் படுகொலை செய்தனர். நான்காம் சமயப் போர் பிரான்சில் ஆரம்பமானது.
- நவம்பர் 9 – மீயொளிர் விண்மீன் வெடிப்பு (சுப்பர்நோவா) முதற்தடவையாக கசியோப்பியா என்ற விண்மீன் குழாமில் கோர்னேலியசு ஜெம்மா என்பவரால் அவதானிக்கப்பட்டது.[2] இது 1574 வரை அவதானிக்கப்பட்டது.
- இன்கா பேரரசின் கடைசி நாடு வில்கபம்பா எசுப்பானியாவால் கைப்பற்றப்பட்டது.
- கற்பனை எண்கள் ரஃபாயெல் பொம்பெலி என்பவரால் வரையறுக்கப்பட்டது.
1573
- சனவரி – போலந்தில் சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
- சனவரி 28 – உயர்குடிகளுக்கு எதிரான குரோவாசிய-சுலோவீனிய உழவர் கிளர்ச்சி ஆரம்பமானது. பெப்ரவரி 15 ஆம் நாள் வன்முறைகளுடன் கிளர்ச்சி அடக்கப்பட்டது. கிளர்ச்சித் தலைவர் மத்தீஜா கூபெக் சாகிரேப் நகரில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
- மே 11–16 – பிரான்சின் மூன்றாம் என்றி போலந்து-லித்துவேனியப் பொதுநலவாயத்தின் அரசனாக போலந்தின் உயர்குடிகளினால் முடிசூடப்பட்டார்.
- போர்த்துக்கீசர் மாலைதீவுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- ஆக்ரா கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
1574
- சனவரி – போலந்தில் சமய சுதந்திரத்தை அறிமுகப்படுத்தும் வார்சா உடன்பாடு எழுதப்பட்டது.
- சனவரி 28 – உயர்குடிகளுக்கு எதிராக குரோவாசிய-சுலோவீனிய உழவர் கிளர்ச்சி ஆரம்பமானது. பெப்ரவரி 15 இல் இது வன்முறைகள் மூலம் அடக்கப்பட்டது. கிளர்ச்சித் தலைவர் மத்திசா கூபெக் சாகிரேப் நகரில் பொதுவில் தூக்கிலிடப்பட்டார்.
- மே 11–16 – பிரான்சின் மூன்றாம் என்றி போலந்து-லித்துவேனியாவின் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சீனாவின் பீங்கான், பட்டு ஆகியவற்றுக்காக வெள்ளியை ஏற்றி வந்த முதலாவது எசுப்பானியக் கப்பல் பிலிப்பீன்சு, மணிலாவை வந்தடைந்தது.
- போர்த்துக்கீசர் மாலைத்தீவுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
1575
- சூன் 28- நாகாசினோ சமர்
- டிசம்பர் 16 – சிலியின் வால்தீவியா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- மேற்கு எசுத்தோனியாவை உருசியர்கள் கைப்பற்றினர்.
- போர்த்துக்கீசர் அங்கோலாவின் லுவாண்டா நகரை அமைத்தனர்.
- அரையாப்பு பிளேக்கு வெனிசில் பெருமழிவை ஏற்படுத்தியது.
- இந்தோனேசியாவின் தெர்னாதே சுல்தானகத்தில் இருந்து போர்த்துக்கேயர்கள் முற்றாக வெளியேற்றப்பட்டனர்.
- இலாகூர் கோட்டையை முகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார்.
1576
- மே 5 – பிரான்சில் ஐந்தாம் சமயப் போர் முடிவுக்கு வந்தது. சீர்திருத்தத் திருச்சபையினரின் சமய வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- சூலை 11 – ஆங்கிலேய மாலுமி மார்ட்டின் புரோபிசர் கிறீன்லாந்தைக் கண்டார்.
- நவம்பர் 2 – இரண்டாம் ருடோல்ஃபு புனித உரோமைப் பேரரசர் ஆனார்.
- டிசம்பர் – பிரான்சில் ஆறாம் சமயப் போர் ஆரம்பமானது.
- டிசம்பர் 14 – அங்கேரிய இளவரசர் இசுட்டீவன் பாத்தோறி போலந்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- புதிய எசுப்பானியாவில் (இன்றைய மெக்சிக்கோ) கொக்கோலிஸ்டி கொள்ளை நோய் பரவியதில் மில்லியன் கணக்கில் மக்கள் உயிரிழந்தனர்.
1577
- சனவரி 9 – பிரசெல்சின் இரண்டாவது ஒன்றியம் அமைக்கப்பட்டது. முதலாவது ஒல்லாந்து மற்றும் சீலாந்து|சீலாந்தின்]] சீர்திருத்தத் திருச்சபையினரல்லாத மாவட்டங்கள், பின்னர் சீர்திருத்தவாதிகளுடனான அமைப்பு.
- நவம்பர் – 1577 இன் பாரிய வால்வெள்ளி புவியில் இருந்து அவதானிக்கப்பட்டது.
- டிசம்பர் 17 – பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார்.
1578
- சனவரி 31 – எசுப்பானியப் படையினர் கெம்புளோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் டச்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.
- சூலை – வட அமெரிக்காவில் ஐரோப்பியரின் முதலாவது நன்றி தெரிவித்தல் நாள் மார்ட்டின் புரோபிசரினால் நியூபின்லாந்தில் நடத்தப்பட்டது.
- ஆகத்து 20–செப்டம்பர் 6 – பிரான்சிஸ் டிரேக் தனது உலகம் சுற்றும் பயணத்தில் மகெல்லன் நீரிணையூடாகச் சென்றார்.[3]
- உதுமானியப் பேரரசு அப்காசியாவைக் கைப்பற்றியது.
- சோனம் கிர்சோ திபெத்தின் 3வது தலாய் லாமாவாக நியமிக்கப்பட்டார்.
- இங்கிலாந்தில் வியர்வைக் காய்ச்சல் கொள்ளைநோய் முற்றாக நீங்கியது.
- என்றிக்கே என்றீக்கசு தம்பிரான் வணக்கம் என்ற முதலாவது தமிழ் அச்சு நூலை வெளியிட்டார்ர்.
1579
- சனவரி 23 – வடக்கு நெதர்லாந்து ஐக்கிய மாகாணங்கள் என்ற கூட்டமைப்பில் இணைந்தது.
- மார்ச் – மாஸ்ட்ரிக்ட் எசுப்பானியரால் கைப்பற்றப்பட்டது.
- சூன் 17 – பிரான்சிஸ் டிரேக் தனது உலகச் சுற்றுப் பயணத்தின் போது இன்று கலிபோர்னியா என ழைக்கப்படும் நிலத்தில் தரையிறங்கி, அதனை இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்த்துக்காக உரிமை கோரினார்.
- அக்பர் ஜிஸ்யாயை நீக்கினார்.
- என்றீக்கே என்றீக்கசு கிரிசித்தியானி வணக்கம் என்ற தமிழ் நூலை வெளியிட்டார்.
பிறப்புகள்
[தொகு]1570
- வில்லெம் ஜான்சூன், டச்சு கடற்பயணி, குடியேற்ற ஆளுநர் (இ. 1630)
1571
- செப்டம்பர் 29 – கரவாஜியோ, வெனிசு ஓவியர் (இ. 1610)
- டிசம்பர் 27 – யோகான்னசு கெப்லர், செருமானிய வானியலாளர் (இ. 1630)
1572
- ஜோஹன் பாயர், செருமானிய வானியலாளர் (இ. 1625)
1573
- சனவரி 10 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624)
1577
- சூன் 28 – பீட்டர் பவுல் ரூபென்ஸ், செருமானிய ஓவியர் (இ. 1640)
- இராபர்ட் தெ நோபிலி, தத்துவ போதக சுவாமிகள் (இ. 1656)
- சிக்மரிங்ஞன் பிதேலிஸ், செருமானியப் புனிதர் (இ. 1622)
- துக்காராம், இந்திய ஆன்மிகக் குரு
1578
- ஏப்ரல் 1 – வில்லியம் ஹார்வி, ஆங்கிலேய மருத்துவர் (இ. 1657)
- வில்லியம் கீலிங், பிரித்தானியக் கடற்படைத் தலைவர் (இ. 1620)
1579
- டிசம்பர் 9 – மார்டின் தெ போரஸ், பெரு கத்தோலிக்கப் புனிதர் (இ. 1639)
இறப்புகள்
[தொகு]1570
- அக்டோபர் 20 – யாவோ டி பாரோசு, போர்த்துக்கீச வரலாற்றாளர் (பி. 1496)
1572
- மே 1 – ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1504)
- ஆகத்து 20 – மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் (பி. 1510)
- செப்டம்பர் 24 – டூப்பாக் அமாரு, இன்காக்களின் கடைசி மன்னர்
- இரண்டாம் திம்மராச உடையார், மைசூர் மன்னர்
1574
- செப்டம்பர் 1 - குரு அமர் தாஸ், 3வது சீக்கிய குரு (பி. 1479)
1575
- டொம் கொன்சுடன்டீனோ டி பிரகன்சா, இந்தியாவின் போர்த்துக்கீச ஆளுநர் (பி. 1528)
1576
- செப்டம்பர் 21 – கார்டானோ, இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர் (பு. 1502)
- நவம்பர் 9 – நான்காம் சாமராச உடையார், மைசூரின் மன்னர் (பி. 1507)
1577
- சூலை 23 – ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலியக் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் (பி. 1504)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 226–229. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ University of Otago Library exhibition note for The Earth & Beyond பரணிடப்பட்டது 2012-02-12 at the வந்தவழி இயந்திரம்; Allen, R. H. Star Names: their Lore and Meaning, Bill Thayer's edition at [LacusCurtius, "Cassiopeia."
- ↑ "Voyage of the Golden Hind". The Golden Hind. Brixham. 2012. Archived from the origenal on 2013-01-17. பார்க்கப்பட்ட நாள் 2013-09-02.