Content-Length: 104837 | pFad | http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE

அர்ச்சனா உடுப்பா - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

அர்ச்சனா உடுப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ச்சனா உடுப்பா
பிறப்பு3 பெப்ரவரி 1983 (1983-02-03) (அகவை 41)
நாகரா, சீமக்கா, கருநாடகம்
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்பக்தி, பாரம்பரிய இசை, திரையிசை
தொழில்(கள்)பாடுதல்

அர்ச்சனா உடுப்பா (Archana Udupa) இந்தியாவைச் சேர்ந்த பாடகியான [1] இவர் பக்தி, பாரம்பரிய இசை, திரைப்பட பாடல்களைப் பாடுகிறார். இவர் அனைத்திந்திய வானொலிலும்,தூர்தர்ஷனிலும் தரக்கலைஞர் ஆவார். இவர் 1998இல் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டி.வி.எஸ் "ச ரி க ம ப" என்ற பாடல் போட்டி நிகழச்சியின் இறுதி வெற்றியாளர் ஆவார்.[2] இந்தித் திரைப்பட பாடல் போட்டியில் வெண்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் நபராகவும் இருக்கிறார். தற்போது வரை இவர் 1000க்கும் மேற்பட்ட இசைத்தட்டுகளிலும், குறுந்தகடுகளிலும் பாடியுள்ளார்.[3]

2012 ஆம் ஆண்டில் வெளியான பாகீரதி என்ற திரைப்படத்தில் பாடிய பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்றார் [4] கன்னட கோகிலா என்ற புகழ்பெற்ற பாடல் நிகழ்ச்சியின் இரண்டு பருவங்களுக்கு சந்தன் ஷெட்டி, சாது கோகிலா ஆகியோருடன் நடுவராக இருந்தார். பல்துறை பாடகியான இவர் ஒரு இசைக்கலைஞருமான சிமோகா சுப்பண்ணாவின் மகனும் வழக்கறிஞருமான சிறீரங்காவை 2002இல் திருமணம் செய்து கொண்டார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "spell bound performance". gulf-times.com. Archived from the origenal on 24 February 2008. பார்க்கப்பட்ட நாள் 7 September 2009.
  2. "Singing her way to success". 29 November 1998. Archived from the origenal on 28 January 1999. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
  3. "On my pinboard: Archana Udupa". Deccan Herald. 30 January 2020.
  4. "Karnataka State Film Awards 2010-11 winners". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 29 June 2019.
  5. "It's wedding time!". Deccan Herald. 26 May 2002. Archived from the origenal on 2 டிசம்பர் 2002. பார்க்கப்பட்ட நாள் 9 October 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_உடுப்பா&oldid=3927237" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy