ஆட்டப்பகுதி (துடுப்பாட்டம்)
துடுப்பாட்டத்தில் ஆட்டப்பகுதி அல்லது முறை (Innings)[1] என்பது ஒரு அணி அல்லது அதன் மட்டையாளர் தங்களின் முறை வரும்போது களமிறங்கி விளையாடும் பகுதியைக் குறிக்கும்.[2] ஒரு அணியின் முறை முடிந்த பிறகு அதன் எதிரணி தனது முறையை விளையாடும். பொதுவாக முதல்-தரப் போட்டிகளில் 4 ஆட்டப்பகுதிகளும் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் 2 ஆட்டப்பகுதிகளும் இடம்பெறும்.
ஒரு அணியின் ஆட்டப்பகுதி முடிவுக்கு வரும் நிலைகள் பின்வருமாறு:
- பத்து மட்டையாளர்கள் ஆட்டமிழந்து வெளியேறுதல் (பொது)
- வெற்றிக்குத் தேவையான இலக்கை எட்டுதல் (பொது)
- ஆட்ட நேரம் முடிதல் (தேர்வு)
- நிறைவுகளின் அளவு முடிதல் (ஒநாப)
- ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அணித்தலைவர் அறிவித்தல் (தேர்வு)
- களத்தடுப்பு அணி போட்டியில் இருந்து விலகுதல் (தேர்வு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "innings - தமிழ் விக்சனரி". ta.wiktionary.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-01.
- ↑ "INNINGS | meaning in the Cambridge English Dictionary". dictionary.cambridge.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-25.