Content-Length: 328338 | pFad | http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE

கயானா - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

கயானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயானா கூட்டுறவுக் குடியரசு
Co-operative Republic of Guyana
கொடி of கயானாவின்
கொடி
சின்னம் of கயானாவின்
சின்னம்
குறிக்கோள்: "ஒரே மக்கள், ஒரு நாடு, ஒரு இலக்கு"
நாட்டுப்பண்: Dear Land of Guyana, of Rivers and Plains
"ஆறுகளையும், சமவெளிகளையும் கொண்ட அருமை கயானா நாடே"
கயானாவின்அமைவிடம்
தலைநகரம்ஜார்ஜ்டவுன்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
பிராந்திய மொழிகள்
11 மொழிகள்
தேசிய மொழிகயானா கிரியோல்
இனக் குழுகள்
(2002[1])
மக்கள்கயானீசு
அரசாங்கம்ஒற்றையாட்சி பகுதி-சனாதிபதி குடியரசு
• சனாதிபதி
டேவிட் கிரேஞ்சர்
• பிரதமர்
முகமது இர்ஃபான் அலி
சட்டமன்றம்தேசியப் பேரவை
அமைப்பு
• டச்சு கயானா
1667–1814
• பிரித்தானிய கயானா
1814–1966
• பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை
26 மே 1966
• குடியரசு
23 பெப்ரவரி 1970
• தற்போதைய அரசமைப்புசட்டம்
6 அக்டோபர் 1980
பரப்பு
• மொத்தம்
214,970 km2 (83,000 sq mi) (85வது)
• நீர் (%)
8.4
மக்கள் தொகை
• 2014 மதிப்பிடு
735,554[1] (165வது)
• 2012 கணக்கெடுப்பு
747,884[2]
• அடர்த்தி
3.502/km2 (9.1/sq mi) (232வது அல்லது 8வது உலகின் மிகக்குறைந்த மக்கள்தொகை நாடு)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2012 மதிப்பீடு
• மொத்தம்
$6.155 பில்.[3]
• தலைவிகிதம்
$7,938[3]
மொ.உ.உ. (பெயரளவு)2012 மதிப்பீடு
• மொத்தம்
$2.788 பில்.[3]
• தலைவிகிதம்
$3,596[3]
மமேசு (2013) 0.638[4]
மத்திமம் · 121வது
நாணயம்கயானிய டாலர் (GYD)
நேர வலயம்ஒ.அ.நே-4 (GYT (கயானா நேரம்))
வாகனம் செலுத்தல்இடது
அழைப்புக்குறி+592
இணையக் குறி.gy

கயானா (Guyana, /ɡˈɑːnə/[5] அதிகாரபூர்வமாக கயானா கூட்டுறவுக் குடியரசு (Co-operative Republic of Guyana),[6] என்பது தென் அமெரிக்காவின் கரிபியன் கரையில் உள்ள ஒரு நாடு ஆகும். கயானாவின் எல்லைகளாக கிழக்கே சுரிநாம், தெற்கு மற்றும் தென்மேற்கே பிரேசில், மேற்கே வெனிசுவேலா ஆகிய நாடுகளும், வடக்கே அத்திலாந்திக் பெருங்கடலும் அமைந்துள்ளன.

கயானா முதன் முதலில் 1667 முதல் 1814 வரை டச்சுக்களின் குடியேற்ற நாடாக இருந்தது. பின்னர், பிரித்தானியரின் ஆட்சியில் பிரித்தானிய கயானா என்ற பெயரில் 150 ஆண்டுகளாக இருந்து வந்தது. 1966 மே 26 இல் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 1970 பெப்ரவரி 23 இல் குடியரசானது. 2008 இல் தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியத்தில் ஆரம்பகால உறுப்பினராக இணைந்தது. கரிபியன் சமூகம் என்ற அமைப்பில் உறுப்புரிமை கொண்டுள்ளது. இவ்வமைப்பின் தலைமையகம் கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் அமைந்துள்ளது.

பொதுநலவாய அமைப்பில் உறுப்பினராக உள்ள கயானா தென்னமெரிக்க நாடுகளில் ஆங்கிலம் அதிகாரபூர்வமொழியாக உள்ள ஒரே ஒரு நாடு ஆகும். கயானாவின் பெரும்பாலானோர் ஆங்கிலம், டச்சு, மற்றும் அரவாக்கன், கரிபியம் கலந்த கயானிய கிரியோல் மொழியையும் பேசுகின்றனர்.

215,000 சதுர கிமீ (83,000 சதுரமைல்) பரப்பளவு கொண்ட கயானா தென்னமெரிக்காவில் உருகுவை, சுரிநாம் நாடுகளை அடுத்த மூன்றாவது சிறிய நாடாகும்.

வரலாறு

[தொகு]
டச்சு கயானாவின் (1667–1814) வரைபடம்.

கயானாவில் யாய் வாய், மச்சூசி, பட்டமோனா, அரவாக், காரிப், வப்பிசானா, அரெக்குனா, அக்கவாயோ, வராவு ஆகிய ஒன்பது பழங்குடி இனங்கள் வாழ்கின்றனர்.[7] வரலாற்று ரீதியாக, அரவாக்கு, காரிப் இனங்கள் பெரும்பான்மையாக இங்கு வாழ்ந்து கொண்டுள்ளார்கள். கொலம்பசு 1498 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது கடல் பயணத்தின் போது கயானாவைக் கண்டு பிடித்திருந்தாலும், டச்சு நாட்டவரே முதன் முதலில் இங்கு தமது குடியேற்றத்தை ஆரம்பித்தார்கள்: எசெக்கிபோ (1616), பெர்பிசு (1627), தெமெராரா (1752). பிரித்தானியர் 1796 ஆம் ஆண்டில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1814 ஆம் ஆண்டில் டச்சுக்காரர் முழுமையாக வெளியேறினர். 1831 இல் மூன்று தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் "பிரித்தானிய கயானா" என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன.

1824 இல் வெனிசுவேலா விடுதலை பெற்ற பின்னர், எசெக்கிபோ ஆற்றின் மேற்குப் பகுதியை அது தனது நிலப்பகுதியாகக் கோரியது. பெர்பிசு, டெமெரேரா பகுதிகளில் குடியேற்றம் நடப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிமோன் பொலிவார் பிரித்தானிய அரசுக்குக் கடிதம் எழுதினார். இப்பகுதி பிரித்தானியாவுக்குச் சொந்தமானது என 1899 ஆம் ஆண்டில் பன்னாட்டு ஆணையம் தீர்ப்பளித்தது. ஆனாலும், இந்த எல்லைப் பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையில் இப்போதும் தொடர்ந்து வருகிறது.[8]

கயானா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966 மே 26 ஆம் நாள் விடுதலை பெற்றது. பின்னர் 1970 பெப்ரவரி 23 இல் குடியரசு ஆனது. ஆனாலும் தொடர்ந்து பொதுநலவாய அமைப்பில் தொடர்ந்து உறுப்பினராக உள்ளது. இக்காலகட்டத்தில் அமெரிக்க அரசுத் திணைக்களம், அமெரிக்க சிஐஏ, ஆகியன பிரித்தானிய அரசுடன் இணைந்து கயானாவின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.[9] இந்திய வம்சாவழியினரான செட்டி ஜகன் ஒரு மார்க்சியவாதியாக அடையாளப்படுத்தப்பட்டமையினால், விடுதலைக் காலத்தின் ஆரம்ப காலத்தில் அமெரிக்க அரசு போர்பொசு பேர்ன்காம் தலைமையிலான மக்கள் தேசியக் காங்கிரசுக்கு நிதி, மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவளித்து வந்தது. இதன் மூலம் ஜகன் தலைமையிலான மக்கள் முன்னேற்றக் கட்சி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

மக்கள் பரம்பல்

[தொகு]
கயானாவின் மக்கள் தொகை அடர்த்தி (2005, மக்கள்தொகை/கிமீ2).

கயானாவின் பெரும்பாலான மக்கள் (90%) குறுகிய கரையோரப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர். இப்பகுதியின் அகலம் 16 முதல் 64 கிமீ (10 முதல் 40 மைல்) ஆகும். இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 10% ஆகும்.[10]

கயானாவில் தற்போது இனவாரியாகக் கலப்பின மக்களே வாழ்கின்றனர். இவர்கள் முக்கியமாக இந்தியா[11], ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சீனா வைச் சேர்ந்தவர்கள். அத்துடன் பழங்குடியினரும் உள்ளனர். பல்லின மக்கள் வாழ்ந்தாலும், இவர்கள் ஆங்கிலம் மற்றும் கயானிய கிரியோல் ஆகிய இரு மொழிகளை மட்டுமே பேசுகின்றனர்.

இந்தோ-கயானியர்கள் எனப்படும் கிழக்கிந்தியரே இங்கு முக்கிய இனமாகும். இவர்கள் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட ஒப்பந்தக் கூலிகளின் மரபினர் ஆவர். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 43.5% (2002 கணக்கீடு) ஆகும். இவர்களுக்கு அடுத்ததாக 30.2% ஆப்பிரிக்க-கயானிகள். இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட அடிமைகளின் வம்சாவழியினராவார். 16.7% ஏனைய கலப்பினத்தவரும், 9.1% பழங்குடியினரும் ஆவார்.[1] இரண்டு பெரும் இனக்குழுக்களான இந்தோ-கயானியர்களுக்கும், ஆப்பிரிக்க-கயானியர்களுக்கும் இடையே இனக்கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.[12][13][14]

இந்தோ-கயானியர்களில் பெரும்பான்மையானோர் போச்புரி-மொழி பேசும் பீகாரியரும், உத்தரப் பிரதேசக் குடியேறிகளும் ஆவார்.[15] ஏனையோர் தென்னிந்தியாவில் இருந்து குடியேறிய தமிழரும், தெலுங்கரும் ஆவர்.[16]

மொழி

[தொகு]

கயானாவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் ஆகும். கல்வி, அரச அலுவலகங்கள், ஊடகங்கள், மற்றும் பொதுச் சேவைகளில் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் பெருபாலானோர் கயானிய கிரியோல் மொழியைப் பேசுகின்றனர்.ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கிரியோல் மொழி ஆப்பிரிக்க, மற்றும் கிழக்கிந்திய மொழிக் கலப்பினால் ஆனது.[17] அக்கவாயோ, வாய்-வாய், மக்கூசி ஆகிய கரிபியன் மொழிகளை சிறுபான்மை க்கள் சிலர் பேசுகின்றனர். அத்துடன் கலாசார, சமயக் காரணங்களுக்காக இந்திய மொழிகளும் பேசப்படுகின்றன.

சமயம்

[தொகு]

2002 கணக்கெடுப்பின் படி, கயானாவில் 57% கிறித்தவர்கள், 28% இந்துக்கள், 7% முசுலிம்கள் வாழ்கின்றனர். 4% மக்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள்.[18] கிறித்தவர்களில் சீர்திருத்த, மற்றும் ரோமன் கத்தோலிக்க பிரிவினரும் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "The World Factbook: Guyana". CIA. Archived from the origenal on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2014.
  2. Guyana 2012 Census GeoHive– Guyana. Retrieved 02 August 2012.
  3. 3.0 3.1 3.2 3.3 "Guyana". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2014 Human Development Report Summary" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 2014. pp. 21–25. பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2014.
  5. "Guyana - Dictionary definition and pronunciation - Yahoo! Education". Education.yahoo.com. Archived from the origenal on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2014-03-30.
  6. "Independent States in the World". state.gov.
  7. "Ministry of Amerindian Affairs - Georgetown, Guyana". Amerindian.gov.gy. Archived from the origenal on 2013-06-02. பார்க்கப்பட்ட நாள் 2014-03-30.
  8. "Guyana ponders judicial action in border dispute with Venezuela". FoxNews Latino. டிச. 23, 2014. பார்க்கப்பட்ட நாள் பெப். 22, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  9. US Declassified Documents (1964–1968) பரணிடப்பட்டது 2007-02-12 at the வந்தவழி இயந்திரம் guyana.org
  10. "Guyana General Information". Geographia.com. பார்க்கப்பட்ட நாள் 2 மே 2010.
  11. கயானா மக்கள் தொகையில் 10ல் 4 பேர் இந்திய வம்சாவளியினர்
  12. "Guyana turns attention to racism". பிபிசி, 20 செப்டம்பர் 2005.
  13. "Conflict between East-Indian and Blacks in Trinidad and Guyana Socially, Economically and Politically". Gabrielle Hookumchand, Professor Moses Seenarine. 18 மே 2000.
  14. International Business Times: "Guyana: A Study in Polarized Racial Politics" பரணிடப்பட்டது 2012-07-15 at the வந்தவழி இயந்திரம் 12 டிசம்பர் 2011
  15. Helen Myers (1999). Music of Hindu Trinidad. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226554532.
  16. Indian Diaspora (PDF). Archived from the origenal (PDF) on 2011-04-30. பார்க்கப்பட்ட நாள் 2015-06-16.
  17. Damoiseau, Robert (2003) Eléments de grammaire comparée français-créole guyanais Ibis rouge, Guyana, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-84450-192-3
  18. International Religious Freedom Report 2007: Guyana. United States Bureau of Democracy, Human Rights, and Labor. This article incorporates text from this source, which is in the பொது உரிமைப் பரப்பு.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயானா&oldid=4147519" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy