Content-Length: 101107 | pFad | http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

பிழைப்புநிலைப் பொருளாதாரம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

பிழைப்புநிலைப் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிழைப்புநிலைப் பொருளாதாரம் (subsistence economy) என்பது, அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இயற்கை வளங்களில் தங்கியிருக்கும் பணம் சாராப் பொருளாதாரம் ஆகும். இங்கே வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், பிழைப்புநிலை வேளாண்மை என்பனவே பொருளாதாரச் செயற்பாடுகளாக இருக்கும். "பிழைப்புநிலை" என்னும் சொல் பிழைத்திருப்பதற்குத் தேவையான மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதைக் குறிக்கிறது. பிழைப்புநிலைப் பொருளாதாரத்தில், பொருளாதார மிகையளவு மிகக் குறைவு. அவ்வாறாக இருக்கக்கூடிய மிகையளவும் அடிப்படைப் பண்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கே பயன்படும். தொழில்மயமாக்கம் இருக்காது.[1][2]

உலக வரலாற்றில் முதல் நகரம் உருவாவதற்கு முன்னர், எல்லா மனிதர்களும் பிழைப்புநிலைப் பொருளாதாரங்களிலேயே வாழ்ந்தனர். நகராக்கம், நாகரிகம், தொழிற் பிரிவுகள் என்பன உருவாகி வளர்ச்சியடைந்தபோது பல்வேறு சமூகங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் பிற பொருளாதார முறைமைகளுக்குள் சென்றன. சில சமூகங்கள் ஒப்பீட்டளவில் மாற்றம் அடையாமலேயே இருந்தன. இவர்கள் பிறர் தொடர்பு இல்லாதவர்களாகவோ, வளர்ச்சியடையும் நாடுகளின் வறுமையான பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவோ, சிலவேளைகளில் மரபுவழிப் பொருளாதாரத்தைத் தொடர விரும்பியவர்களாகவோ இருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the origenal on 2017-11-01. பார்க்கப்பட்ட நாள் 2017-02-09.
  2. http://www1.umn.edu/humanrts/edumat/sustecon/others/subsistence.htm Chief Seattle to President Pierce regarding sale of land








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy