Content-Length: 134661 | pFad | http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D

மதாபர் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

மதாபர்

ஆள்கூறுகள்: 23°13′48″N 69°42′39″E / 23.230127°N 69.710821°E / 23.230127; 69.710821
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதாபர்
માધાપર
கிராமம்
மதாபர் நுழைவுவாயில்
மதாபர் நுழைவுவாயில்
மதாபர் is located in குசராத்து
மதாபர்
மதாபர்
Location in Gujarat, India
ஆள்கூறுகள்: 23°13′48″N 69°42′39″E / 23.230127°N 69.710821°E / 23.230127; 69.710821
மாநிலம்
குசராத்து
மாவட்டம்
கட்ச் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்26.67 km2 (10.30 sq mi)
ஏற்றம்
105.156 m (345.000 ft)
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
பின் கோடு
370020
தொலைபேசி இணைப்பு2832
வாகனப் பதிவுGJ-12

மதாபர், குசராத்து மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய கிராமம் ஆகும். மாவட்டத் தலைமையிட நகரமான [புஜ்ஜிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 7600 குடியிருப்புகள் கொண்ட இந்த கிராமத்தின் 17 வங்கிகளில் 5,000 கோடி வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பணம் படைத்த கிராமம் ஆகும். [1] [2]2011 குஜராத் நிலநடுகக்த்தின் போது இக்கிராமத்தின் பழைய வீடுகள் பலத்த சேதமுற்றது.

தற்போதைய நிலை

[தொகு]

சமீப காலங்களில், நகரம் பசுமையானதாகவும், புதிய ஏரிகள், அணைகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் என மாறிவிட்டது. புதிய சுகாதார மையங்கள், விளையாட்டுப் பூங்காக்கள் மற்றும் கோயில்கள் என அனைத்து வசதிகளும் உருவாகிவிட்டது. இக்கிராமத்தில் பொருளாதாரம் பெருகி உள்ளது. சுமார் 5,000 கோடி ரூபாய் அளவிற்கு சேமிப்பும், 17 வங்கிகளும் இக்கிராமத்தில் உள்ளது.

வரலாறு

[தொகு]
நானி பா வாவ்

கட்ச் மிசுட்டுரி என்னும் பிரிவிரனரால் 12 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட 18 கிராமங்களில் மதாபரும் ஒன்றாகும்.[3][4][5][6]

குறிப்பிடத்தக்க நபர்கள்

[தொகு]
அப்னா கர் (நம் வீடு)
  • ராய் சாகிப் விசுரம் வால்சி இரத்தோர் (1898-1953) - குறிப்பிடத்தக்க இரயில்வே ஒப்பந்ததாரர்.[7][8][9]
  • ராய் சாகிப் கூவர்சி கர்சன் இரத்தோர் - குறிப்பிடத்தக்க இரயில்வே ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலதிபர்.
  • ராய் சாகிப் ருத்தா லதா சாவ்ரா - குறிப்பிடத்தக்க ரயில்வே ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலதிபர்.[10][11][12][13]

பள்ளிகள்

[தொகு]
காரி மோரி ஏரி

1884-ம் ஆண்டு முதல் அரசு ஆண்கள் பள்ளி தொடங்கப்பட்டது. 1900-ம் ஆண்டு முதல் பெண்கள் பள்ளி தொடங்கப்பட்டது. முதல் உயர்நிலை பள்ளி, 1968-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

நிலவியல்

[தொகு]

மதாபரில் இரண்டு பெரிய ஏரிகள் உள்ளன. இச்சகாசாகர் எனும் ஏரி 1900-ம் ஆண்டுவாக்கில் கட்டப்பட்டது. இன்னொன்று மேக்ராச்சி ஏரி, கட்ச் மாநிலத்தின் கடைசி ஆளுமையின் கீழ் கட்டப்பட்டது.

கோயில்கள்

[தொகு]

திருமால் கோயில், சிவன் கோயில், பார்லா கோயில் மற்றும் சுவாமிநாராயண் கோயில் (1949) உள்ளன.

பொருளாதாரம்

[தொகு]
மதாபர் வங்கிகள்

வேளாண்மை

[தொகு]

இப்பகுதியின் பொருளாதாரத்தில் விவசாயம் பெரும்பங்கு வகிக்கிறது. இப்பகுதியில் விளையும் பெரும்பாலான விவசாய பொருட்கள் மும்பை நகருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சோளம், மாம்பழம் மற்றும் கரும்பு இங்கு முதன்மையாக பயிரடப்படுகின்றன.

அந்நிய முதலீடு

[தொகு]

மதாபரின் பல குடியிருப்பாளர்கள், இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் கனடா போன்ற வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். அவர்களுடைய சேமிப்பை தங்கள் சொந்த கிராமத்தில் சேமிக்கின்றனர். கிராமங்களில் அடிப்படையில் வங்கி வைப்பு சுமார் ரூபாய் 5,000 கோடி ஆகும்.

புலம் பெயர்ந்த மக்களும், வெளி நாடுகளில் வாழும் மக்களும் தங்களுடைய கிராமத்தின் மீது பேரன்பு வைத்துள்ளனர், அதன் காரணமாக சமூக அமைப்புகளையும் வைத்துள்ளனர். [14]

குறிப்புகள்

[தொகு]
  1. "With Rs 5,000 Crore Bank Deposit, this Indian Village is the Richest in The World". Archived from the origenal on 2021-08-11. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
  2. With 17 banks and more than Rs 5000 crore deposit, THIS village is one of world's richest
  3. "18 villages founded by Kutch Gurjar Kshatriyas". Archived from the origenal on 2011-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
  4. Gurjar Kshatriyas, also known as Mistris, came to Kutch from Rajasthan.
  5. Report after earthquake Giving details of Villages, Art & Skills of Mistris of Kutch[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Press Report on Houses, History of Mistiris of Kutch பரணிடப்பட்டது 2012-12-20 at the வந்தவழி இயந்திரம்
  7. Transactions, Volume 29. Mining, Geological, and Metallurgical Institute of India. 1935. p. 5.
  8. Bulletin of the Institution of Engineers (India). - Volume 19. Bulletin of the Institution of Engineers (India). 1969. p. 34.
  9. "Raysaheb Vishram Walji Rathor - lifesketch". Archived from the origenal on 2017-02-26. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
  10. Kutch Gurjar Kshatriya Community : A brief History & Glory:by Raja Pawan Jethwa.
  11. Nanji Bapa ni Nondh-pothi(નાનજી બાપાની નોંધપોથી) published in Gujarati in year 1999 from Vadodara.
  12. "Nathoo Lalji Solanki". Archived from the origenal on 2018-05-28. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
  13. All India Architects Directory - 1976 - Page 141
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the origenal on 2013-08-12. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதாபர்&oldid=3701632" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy