Content-Length: 279391 | pFad | http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D

கேன்டர்பரி நகரின் அன்சலேம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

கேன்டர்பரி நகரின் அன்சலேம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேன்டர்பரி நகரின் புனித அன்சலேம்
கேன்டர்பரி நகரின் பேராயர்
மறைமாநிலம்கேடன்பரி
மறைமாவட்டம்கேடன்பரி
ஆட்சி பீடம்கேடன்பரி
நியமனம்1093
ஆட்சி முடிவு(1109-04-21)21 ஏப்ரல் 1109
முன்னிருந்தவர்லான்ஃப்ரேன்க்
பின்வந்தவர்ரால்ஃப் தெ எஸ்கியூர்ஸ்
பிற பதவிகள்பெக் ஆதீனத் தலைவர்
திருப்பட்டங்கள்
ஆயர்நிலை திருப்பொழிவு4 டிசம்பர் 1093
பிற தகவல்கள்
இயற்பெயர்ஆஸ்தா நகரின் அன்சலேம்
பிறப்புஅண். 1033
ஆஸ்தா, பர்கண்டி பேரரசு
இறப்பு21 ஏப்ரல் 1109(1109-04-21) (அகவை 75)
கேன்டர்பரி, இங்கிலாந்து
கல்லறைகேன்டர்பரி மறைமாவட்டப்பேராலயம்
பெற்றோர்கந்தால்ஃப்
எமென்பெர்கா
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா21 ஏப்ரல்

கேன்டர்பரி நகரின் புனித அன்சலேம் (Anselm of Canterbury) அல்லது பெக்கின் புனித அன்சலேம் (Anselm of Bec, /ˈænsɛlm/; அண். 1033[1] – 21 ஏப்ரல் 1109) என்பவர் புனித ஆசிர்வாதப்பர் சபை துறவியும், மெய்யியலாளரும், கேன்டர்பரி நகரின் பேராயராக 1093 முதல் 1109 வரை இருந்தவரும் ஆவார். கடவுளின் இருப்பினை நிறுவ உள்ளிய வாதத்தினை (Ontological argument) முதன் முதலில் கையாண்டவர் இவர் ஆவர். தனது 27ஆம் அகவையில் பெக் ஆதீனத்தில் துறவியாக இணைந்த இவர், அவ்வாதீனத்தின் தலைவராக 1079இல் தேர்வானார். இங்கிலாந்தின் அரசர் இரண்டாம் வில்லியமின் ஆட்சியின்போது இவர் கேன்டர்பரி நகரின் பேராயராக நியமிக்கப்பட்டார். பணியமர்த்தல் சர்ச்சையினால் முதலில் 1097 முதல் 1100 வரையிலும், பின்னர் 1105 முதல் 1107 வரையிலும் இவர் இங்கிலந்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் 1720இல் ஒரு ஆணை ஓலையின் வாயிலாக இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இவரின் விழாநாள் ஏப்ரல் 21 ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Walsh, p. 117.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anselm of Canterbury
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
ஹெர்லூயின்
பெக் ஆதீனத்தலைவர்
1078–1093
பின்னர்
குயிலாம் தெ மொன்த்ஃபோர்ட்-சுர்-ரைசில்
முன்னர்
லான்ஃப்ரேன்க்
கேன்டர்பரி நகரின் பேராயர்
1093–1109
பின்னர்
ரால்ஃப் தெ எஸ்கியூர்ஸ்
(in 1114)








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy