உருவாத்துக் கரீம்
ரோபட் கரிம்
رباطكريم | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 35°29′05″N 51°04′58″E / 35.48472°N 51.08278°E | |
Country | ஈரான் |
மாகாணம் | தெகுரான் மாகாணம் |
மண்டலம் | Robat Karim |
பாக்ச்சு | Central |
மக்கள்தொகை (2016 Census) | |
• மொத்தம் | 1,05,393 [1] |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT) |
ரோபட் கரிம் (Robat Karim; பாரசீக மொழி: رباطكريم, ரோமானியம்: Robāţ Karīm; முந்தையப்பெயர்: Shahriar என்றும், Shahryār என்றும் அழை எனப்பட்டது. இந்த நகரமானது, ரோபட் கரிம் கவுன்டியின் தலைநகரம் ஆகும். 2006 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள் தொகை 62,937 நபர்களை கொண்டு இருந்தது. இந்நபர்கள் 16,675 குடும்பங்களில் வாழ்ந்து வந்தனர். இந்த நகரமானது, ஈரான் நாட்டின் தலைநகரான தெகுரான் நகரின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. இந்த இரு நகருகளுக்கும் இடையில் உள்ள தொலைவு 27 km (17 mi) ஆகும்.
தகவற்பெட்டி விவரம்
[தொகு]புவியின் ஐந்து கண்டங்களில் ஒன்றான ஆசியக் கண்டத்தின், மேற்குப் பகுதியில்[2][3], பதினெட்டு மத்திய கிழக்கு நாடுகள்[4][5] உள்ளன. இந்த நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, ஈரான் என்ற இசுலாமிய நாடாகும். இதன் பண்டைய வரலாற்றுப் பெயர் பெர்சியா என்பதாகும்.[6] இந்த நாட்டின் 1,648,195 km2 (636,372 sq mi) அளவுள்ள நிலப்பரப்பானது, பல்வேறு நில ஆட்சிக்குரிய அரசுப் பணிகளுக்காக, முப்பத்தொரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[7] அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், தெகுரான் மாகாணம் ஆகும். இம் மாகாணத்தில் மட்டும், 16 கவுன்டிகள்(county) என்று அழைக்கப்படும், தமிழகத்தின் மாவட்டங்கள் போன்ற ஆட்சி அமைப்பு உள்ளன. இந்த பதினாறு மாவட்டங்களில் (தெகுரான், தம்மாவன்டு, இரா, சமிர்நட்டு, வமின், சாரியர், இசுலமசகர், ரோபட் கரிம், பக்ட்சட்டு, பைரூசுக்கு, கியோட்சு, மலர்டு, பிசுவ, பகரேசுடன், பர்டீசு, குவார்சக்கு) ஒன்றான, ரோபட் கரிம் (Robat Karim County شهرستان رباطكريم ) கவுன்டி / மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரமாக, இந்த நகரம் இருக்கிறது.
மக்கள் தொகை
[தொகு]2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 91 வது இடத்தினைப் பெறுகிறது.[1] 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தில் 16,675 குடும்பங்கள் இருந்தன. அந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 62,937 ஆக, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இருந்தது. பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.[8][9] இந்த நாட்டில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 105,393 நபர்கள் இருந்தனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2011 ஆம் ஆண்டு, 78,097 நபர்கள் இருந்தார்கள். இந்த நகரத்தில் பல்வேறு மொழியிலானப் பாரம்பரிய குடும்பங்கள் வாழ்ந்தாலும், பெரும்பான்மையான ஈரானியக் குடும்பங்களில் பிறந்தவர்கள், பாரவேறு எந்த வகையான சமூக சீரமைப்புடன் தொடர்புடையவர்களை விடவும், அதக முக்கியத்துவத்தை, தமது குடும்ப வழித்தோன்றல்களுக்குக் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் அருகருகே வாழ்ந்தாலும், தொலைவில் வாழ்ந்தாலும், சிறிய, பெரிய குடும்பங்களுக்கு இடையை உறவுப் பிணைப்புகள் உறுதியுடன் இருக்கின்றன. மேலும், அவரவர் நடத்தும் தொழில்களிலும் குடும்ப உறுப்பினர்கள் பின்னிப்பிணைந்து சமூகத்தில் நன்மதிப்பைப் பெறுகின்றனர்.[10] தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +34.95% அதிகரித்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 https://www.amar.org.ir/english
- ↑ ""CESWW" – Definition of Central Eurasia". Cesww.fas.harvard.edu. Archived from the original on 5 August 2010. பார்க்கப்பட்ட நாள் 1 August 2010.
- ↑ "Iran Guide". National Geographic. 14 June 2013. Archived from the original on 12 December 2009. பார்க்கப்பட்ட நாள் 21 June 2013.
- ↑ Beaumont, Blake & Wagstaff 1988, ப. 16.
- ↑ Koppes, CR (1976). "Captain Mahan, General Gordon and the origin of the term "Middle East"". Middle East Studies 12: 95–98. doi:10.1080/00263207608700307.
- ↑ A. Fishman, Joshua (2010). Handbook of Language and Ethnic Identity: Disciplinary and Regional Perspectives (Volume 1). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-537492-6.
""Iran" and "Persia" are synonymous" The former has always been used by the Iranian speaking peoples themselves, while the latter has served as the international name of the country in various languages
- ↑ Gwillim Law, Statoids website. "Provinces of Iran". பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2019.
- ↑ Asia-Pacific Population Journal, United Nations. "A New Direction in Population Policy and Family Planning in the Islamic Republic of Iran". Archived from the original on 14 February 2009. பார்க்கப்பட்ட நாள் 14 April 2006.
- ↑ "Iran – population". Countrystudies.us. பார்க்கப்பட்ட நாள் 18 June 2011.
- ↑ http://countrystudies.us/iran/52.htm