உள்ளடக்கத்துக்குச் செல்

காமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காமம் (Kāma, சமசுகிருதம், பாளி; தேவநாகரி: काम) என்பது ஆசை, விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பங்களையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல். இந்து சமய தத்துவத்தில் காமம் என்பது நான்கு புருஷார்த்தங்களில் ஒன்றாகும்.[1][2][3]

மதங்களின் பார்வையில்

[தொகு]

சைவ, வைணவ மதங்களில்

[தொகு]

சைவ, வைணவ மதங்களில், காமம் என்பது நான்கு புருஷார்த்தங்களுள் ஒன்று. ஒரு மனிதனின் வாழ்க்கையில் அடைய வேண்டிய குறிக்கோள்களுள் ஒன்றாக காமம் கருதப்படுகிறது. எனினும் அறம், மற்றும் பொருளுக்கு பின்பே காமம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அறம், பொருள், காமம் ஆகிய மூன்றையும் வாழ்க்கையில் முறையாக கடைபிடித்தால் வீடுபேறு கிடைக்கும் என சைவ, வைணவ மதங்களில் நம்பப்படுகிறது. சைவ சமயத்தில் காமத்தின் அதிபதியாக காம தேவன் கருதப்படுகிறார்.

பௌத்தம்

[தொகு]

இந்து மதத்தைப் போல் அல்லாது, பொதுவாக பௌத்தத்தில் அதுவும் குறிப்பாக தேரவாத பௌத்தத்தில் காமம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புத்தரே போதி நிலை அடைவதற்காக காமத்தைத் துறந்தார். பௌத்த துறவிகள் காமத்தை முற்றிலும் துறந்தாலும், பொது மக்கள் தவறான நடத்தைக் கொள்ளக்கூடாது என்பதை மட்டுமே கூறுகிறது (காமேஸு மிச்சாசார). எனினும் வஜ்ரயான பௌத்ததில் காமத்தை குறித்து இவ்வளவு கடுமையான கருத்துகள் இல்லை.

கிறித்தவம்

[தொகு]

கிறித்தவ மதத்தை பொறுத்தவரை காமம் ஏழு தலையான பாவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காமத்தில் மூழ்கி கிடப்பவர்கள் மறு உலகில் நரகத்திற்கு செல்வர் என நம்பப்படுகிறது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Monier Williams, काम, kāma பரணிடப்பட்டது 2017-10-19 at the வந்தவழி இயந்திரம் Monier-Williams Sanskrit English Dictionary, pp 271, see 3rd column
  2. Macy, Joanna (August 1975). "The Dialectics of Desire". Numen (Leiden: Brill Publishers) 22 (2): 145–160. doi:10.1163/156852775X00095. பன்னாட்டுத் தர தொடர் எண்:0029-5973. 
  3. Mittal, Sushil, தொகுப்பாசிரியர் (June 2015). "When the Vindhya Mountains Float in the Ocean: Some Remarks on the Lust and Gluttony of Ascetics and Buddhist Monks". International Journal of Hindu Studies (Boston: Springer Verlag) 19 (1/2): 171–192. doi:10.1007/s11407-015-9176-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:1022-4556. 

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமம்&oldid=4130372" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy