உள்ளடக்கத்துக்குச் செல்

தனுசு ஏ*

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனுசு ஏ*
Sagittarius A*

2017 இல் இவெண்ட் அரைசன் தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட தனுசு A* இன் படம், 2022 இல் வெளியிடப்பட்டது.
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை தனுசு
வல எழுச்சிக் கோணம் 17h 45m 40.0409s
நடுவரை விலக்கம் −29° 0′ 28.118″[1]
விவரங்கள்
திணிவு8.26×1036 kg
(4.154±0.014)×106[2] M
வான்பொருளியக்க அளவியல்
தூரம்26673±42[2] ஒஆ
(8178±13[2] பார்செக்)
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

தனுசு ஏ* (Sagittarius A*, "சகிட்டாரியசு ஏ-இசுட்டார்", சுருக்கமாக Sgr A*[3]) என்பது பால் வழியின் விண்மீன் பேரடையின் நடுவில் அமைந்துள்ள ஒரு மீப்பெரும் கருந்துளை ஆகும்.[4][5][6] இது தனுசு, விருச்சிகம் ஆகிய விண்மீன் குழாம்களின் எல்லைப் பகுதியில், சூரிய வழியின் தெற்கே 5.6° இல்,[7] visually close to the பட்டாம்பூச்சி கொத்து (M6), சவுலா விண்மீன் அமைப்பு ஆகியவற்றின் பார்வைக்கு அண்மையில் அமைந்துள்ளது.

தனுசு A* ஐச் சுற்றி வரும் பல விண்மீன்களின் அவதானிப்புகள், குறிப்பாக நட்சத்திரம் S2 விண்மீன், இதன் திணிவு, ஆரத்தின் மேல் வரம்பு ஆகியவற்றைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்பட்டது. திணிவு மற்றும் பெருகிய முறையில் துல்லியமான ஆரத்தின் வரம்புகளின் அடிப்படையில், தனுசு A* பால்வீதியின் மையப் பெரிய கருந்துளையாக இருக்க வேண்டும் என்று வானியலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.[8] இதன் தற்போதைய திணிவு 4.154 (± 0.014) மில்லியன் சூரியத் திணிவுகள் ஆகும்.[2]

தனுசு A* என்பது ஒரு மீப்பெரும் கருந்துளை என்ற நம்பத்தகுந்த விளக்கத்தைக் கொடுத்தமைக்காக இரைனாடு கென்செல், ஆந்திரியா கியேசு ஆகியோருக்கு 2020 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[9]

வானியலாளர்கள், இவென்ட் அரைசன் (Event Horizon) என்ற தொலைநோக்கியைப் பயன்படுத்தி, தனுசு A* இன் புகைப்படத்தை 2017 ஏப்ரலில் பெறப்பட்ட வானொலி அவதானிப்புகளின் தரவுகளைப் பயன்படுத்தி தயாரித்த புகைப்படத்தை 2022 மே 12 அன்று வெளியிட்டனர்.[10] இப்புகைப்படம் தனுசு A* ஒரு கருந்துளை என்பதை உறுதிப்படுத்தியது. 2019 ஆம் ஆண்டில் மெசியர் 87 இன் மீப்பெரும் கருந்துளைக்குப் பிறகு, கருந்துளை ஒன்றின் இரண்டாவது உறுதிப்படுத்தப்பட்ட படம் இதுவாகும்.[11][12]

கண்காணிப்பு முடிவுகள்

[தொகு]

பூமிக்கும் தனுசு எ* வுக்கும் இடையில் தூசுக்களும் வாயுக்களும் அதிக அளவில் இருப்பதால் வானியலாளர்களால் கட்புலனாகும் நிறமாலையின் மூலம் தனுசு எ*வை கண்காணிக்க முடியவில்லை.[13] இப்போது உள்ள அதிகப்படியான கணினித்திரை பிரிதிறன் (Resolution) உதவியுடன் அளந்ததில் அதன் அலை நீளம் 1.3 மி.மீ.இது 37 பாகைத்துளி கோணவிட்டம் உடையது.சுமார் 26000 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.மேலும் 44 மில்லியன் கிமீ விட்டம் உடையது.தனுசு எ* வின் சீரான இயக்கம், தோரயமாக வருடத்திற்கு -2.70 பாகைத்துளி வல எழுச்சிக் கோணம் (Right ascension) மற்றும் வருடத்திற்கு -5.6 பாகைத்துளி சரிவு (Declination).[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Reid and Brunthaler 2004
  2. 2.0 2.1 2.2 2.3 The GRAVITY collaboration (April 2019). "A geometric distance measurement to the Galactic center black hole with 0.3% uncertainty". Astronomy & Astrophysics 625: L10. doi:10.1051/0004-6361/201935656. Bibcode: 2019A&A...625L..10G. https://www.aanda.org/articles/aa/full_html/2019/05/aa35656-19/aa35656-19.html. பார்த்த நாள்: 2019-10-04. 
  3. "Astronomers reveal first image of the black hole at the heart of our galaxy". eventhorizontelescope.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-12.
  4. "Scientists find proof a black hole is lurking at the centre of our galaxy" (in en-GB). Metro. 2018-10-31 இம் மூலத்தில் இருந்து 2018-10-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181031214911/https://metro.co.uk/2018/10/31/scientists-find-proof-a-supermassive-black-hole-is-lurking-at-the-centre-of-the-milky-way-8092994/. 
  5. "A 'mind-boggling' telescope observation has revealed the point of no return for our galaxy's monster black hole". The Middletown Press. 2018-10-31 இம் மூலத்தில் இருந்து 2018-10-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181031144008/https://www.middletownpress.com/technology/businessinsider/article/Supermassive-black-holes-gorge-themselves-on-a-7971243.php. 
  6. Plait, Phil (2018-11-08). "Astronomers see material orbiting a black hole *right* at the edge of forever" (in ஆங்கிலம்). Syfy Wire. Archived from the original on 10 November 2018. பார்க்கப்பட்ட நாள் 12 November 2018.
  7. Calculated using Equatorial and Ecliptic Coordinates பரணிடப்பட்டது 2019-07-21 at the வந்தவழி இயந்திரம் calculator
  8. Henderson, Mark (2009-12-09). "Astronomers confirm black hole at the heart of the Milky Way". Times Online இம் மூலத்தில் இருந்து 2008-12-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081216235509/http://www.timesonline.co.uk/tol/news/uk/science/article5316001.ece. 
  9. "The Nobel Prize in Physics 2020" (in en-us). 6 October 2020 இம் மூலத்தில் இருந்து 24 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210424115309/https://www.nobelprize.org/prizes/physics/2020/summary/. 
  10. Bower, Geoffrey C. (May 2022). "Focus on First Sgr A* Results from the Event Horizon Telescope". The Astrophysical Journal. https://iopscience.iop.org/journal/2041-8205/page/Focus_on_First_Sgr_A_Results. பார்த்த நாள்: 12 May 2022. 
  11. "Astronomers reveal first image of the black hole at the heart of our galaxy". eso.org. 12 May 2022. https://www.eso.org/public/news/eso2208-eht-mw/. 
  12. Overbye, Dennis (2022-05-12). "The Milky Way's Black Hole Comes to Light". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2022/05/12/science/black-hole-photo.html. 
  13. Osterbrock and Ferland 2006, p. 390
  14. Backer and Sramek 1999, § 3

மேலதிக வாசிப்பு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தனுசு ஏ*
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுசு_ஏ*&oldid=3520785" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy