பர்சப்பாரா அரங்கம்
பர்சப்பாரா அரங்கம், அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு அரங்கம் | |||||
ஒளிவெள்ளத்தில் பர்சப்பாரா அரங்கம் | |||||
அரங்கத் தகவல் | |||||
---|---|---|---|---|---|
அமைவிடம் | பர்சப்பாரா, குவாகாத்தி, அசாம் | ||||
ஆள்கூறுகள் | 26°08′42″N 91°44′11″E / 26.145092°N 91.736512°E | ||||
உருவாக்கம் | 2012 | ||||
இருக்கைகள் | 40,000 | ||||
உரிமையாளர் | அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு | ||||
இயக்குநர் | அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு | ||||
குத்தகையாளர் | அசாம் துடுப்பாட்ட அணி இந்தியத் துடுப்பாட்ட அணி | ||||
முடிவுகளின் பெயர்கள் | |||||
மீடியா முனை பெவிலியன் முனை | |||||
பன்னாட்டுத் தகவல் | |||||
ஒரே ஒநாப | 21 அக்டோபர் 2018: இந்தியா எ மேற்கிந்தியத் தீவுகள் | ||||
முதல் இ20ப | 10 அக்டோபர் 2017: இந்தியா எ ஆத்திரேலியா | ||||
கடைசி இ20ப | 5 சனவரி 2020: இந்தியா v இலங்கை | ||||
முதல் மஇ20ப | 4 மார்ச் 2019: இந்தியா எ இங்கிலாந்து | ||||
கடைசி மஇ20ப | 9 March 2019: இந்தியா எ இங்கிலாந்து | ||||
அணித் தகவல் | |||||
| |||||
5 சனவரி 2020 இல் உள்ள தரவு மூலம்: Barsapara Cricket Stadium, Cricinfo |
பர்சப்பரா துடுப்பாட்ட அரங்கம் (Barsapara cricket stadium), அலுவல்முறையாக டாக்டர். பூபன் ஹசாரிகா துடுப்பாட்ட அரங்கம் என்றும் சுருக்கமாக அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு அரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் அசாம், குவாகாத்தி, பார்சபராவில் உள்ள ஒரு துடுப்பாட்ட மைதானமாகும்.[1] முழு அரங்கத் திட்டத்தின் விலை மதிப்பு ரூ .2300 கோடியாகும். இதை 10 அக்டோபர் 2017 அன்று அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார். பார்சபரா கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் 49ஆவது பன்னாட்டுத் துடுப்பாட்ட நிகழ்விடமாகும்.[2] இங்கு நடைபெற்ற முதல் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்த இ20ப போட்டியாகும். இது உள்நாட்டு மற்றும் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளை நடத்துகிறது.[3]
2010 ஆம் ஆண்டில், அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பானது, மறைந்த டாக்டர். பூபன் ஹசாரிகாவின் நினைவாக அரங்கத்தின் பெயரை மாற்றியது.[4] வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் பார்சபரா அரங்கமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New guwahati station".
- ↑ "International cricket venues in India".
- ↑ "Barsapara Cricket Stadium, Guwahati". cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் 2013-02-03.
- ↑ https://thenortheasttoday.com/facts-about-barsapara-cricket-stadium-in-guwahati-the-host-for-india-australia-t20/[தொடர்பிழந்த இணைப்பு]