உள்ளடக்கத்துக்குச் செல்

விண்வெளிப் போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்புட்னிக் 1, உலகின் முதலாவது செய்மதி. இது 1957 இல் ஏவப்பட்டது.
நீல் ஆம்ஸ்ட்ராங்,1969 இல் முதலாவதாக நிலவிற்கு சென்ற இருவரில் ஒருவர்; நிலவில் முதலாவதாக காலடி வைத்தவர்.

விண்வெளிப் போட்டி என்பது 20ஆம் நூற்றாண்டுகளின் மத்தியில் இருந்து அதற்கு பிறகான காலங்களில் சோவியத் ஒன்றியத்திற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளி ஆய்வுப் பயணத்தில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டியாகும். 1957 மற்றும் 1975களின் இடையே பனிப்போரின் எதிர் நாடுகளான இவ்விரு நாடுகளும் முதலில் விண்வெளி ஆய்வுப் பயணத்தை ஆரம்பிப்பதை குறிக்கோளாய்க் கொண்டிருந்தன. இது தேசிய பாதுகாப்பு, தொழில்நுட்ப மற்றும் கருத்தியல் மேன்மையை நிலைநாட்ட இருநாடுகளுக்கும் மிகவும் தேவையானதாக இருந்தது. இந்த விண்வெளிப் போட்டியில் செயற்கைக் கோள் அனுப்புதல், பூமியைச் சுற்றி சுற்றுப்பாதை மற்றும் துணை சுற்றுப்பாதை மனித விண்வெளிப் பறப்பு மற்றும் நிலவிற்கு பயணம் செய்தல் போன்றவைகளுக்கு இருநாடுகளும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தன. இப்போட்டி சோவியத் ஒன்றியத்தின் ஸ்புட்னிக் 1 செயற்கைக்கோள் ஏவுதலுடன் 4 அக்டோபர் 1957ல் ஆரம்பித்து, சூலை 1975 ல் இருநாடுகளின் கூட்டுத் திட்டமான அப்பல்லோ-சோயூஸ் சோதனைத் திட்டத்துடன் முடிவுக்கு வந்தது.

ஆபரேஷன் காகித கிளிப்

[தொகு]

அமெரிக்காவல் உருவக்க்கபட்ட இந்த ராணுவ ஆபரேஷன் காகித கிளிப் என்பது நாஜி ஜெர்மனி மீது படையெடுத்து அங்கு இருக்கும் வின்வெளிக்கலன் தயார் செய்யும் குழுவின் தலைமை வடிவமைப்பாளர் மற்றும் அதனைச் சார்ந்த விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள் போன்ற பொறுப்பை வகித்த பலரையும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்தது. அவ்வாறு பலரையும் தேடிபிடித்து வேளைக்கு அமர்த்தியது .ஜூன் 1941முதல் ஜெர்மானிய படைகள் முதலில் ருசியவில் தோல்வியை சந்திக்க தொடங்கியது. ரஷ்யாவின் செஞ்சேனை ஜெர்மானிய படைகளை முறியடித்து பல இடங்களில் முன்னேறி கொண்டு வந்தது .அவ்வாறு முன்னேறி வரும் செஞ்சேனை இடம் அகபடாமல் இருக்கவும். நாஜி ஜெர்மனி படைகளால் சுட்டு கொள்ள படாமல் இருக்கவும் தங்கள் உயிரை காப்பற்றி கொள்ள பலரும் அமெரிக்க படைகளிடம் சரண் அடைந்தனர் . வேர்நஹெர் வான் பிரான் என்பவர் ராக்கெட் அறிவியலின் தந்தை என்று கூறுவார்கள் அவரும் அவருடைய சகோதரரும் அவர்களுடன் 126 நபர்கள் அந்த பட்டியலில் அடங்குவார்கள் .சோவியத்து யூனியன் மற்றும் அமெரிக்காவின் இடையில் யார் வல்லரசு என்ற போட்டி மற்றும் அதிகளவில் வி -2 ராக்கெட் பாகங்களை மற்றும் அதன் ஊழியர்கள்சிறை எடுப்பதில் தீவிரம் காட்டினர் இரண்டாம் உலக போர் முடியும் தறுவாயில் இந்த நிலை பெரும் அளவில் வளர்ந்து இருந்தது .அமெரிக்காவின் இந்த ராணுவ ஆபரேஷன் போது 300 தொடர்வண்டி பேட்டியின் அளவு வி -இரண்டு ராக்கெட் உதிரி பாகங்கள் மற்றும் ராக்கெட்டுகள் சிறைபிடிகபட்டு அமெரிக்காவிற்கு அணுபிவைகபட்டது. இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்க மற்றும் அமெரிக்க மற்றும் சோவியத்து யூனியன் ராக்கெட் வடிவமைப்புக்கு அடித்தளமாக அமைந்தது .போரின் முடிவில் இங்கிலாந்தும் இந்த போட்டியில் ஈடுபட்டது .எ4 ராக்கெட் நாஜி ஜெர்மனியர்களால் தயார் செய்யப்பட்டது வின்பெளிக்கு சென்ற முதல் ராக்கெட் என்ற பெருமை இதற்கு உண்டு.அமெரிக்க பெரும் அளவில் வி-இரண்டு ராக்கெட்டுகளை முழுவதுமாக கை பற்றியது அது மட்டும் இன்றி பல ராக்கெட் வடிவமைபாளர்கலையும் தான் வசம் கை பற்றியது அதுவே அந்நாட்டின் விண்வெளி ஆய்வுபயனதிற்கும் அவுகனை தயாரிப்புக்கும் அடித்தளமாக அமைந்தது

விண்வெளி சென்ற முதல் மனிதர்கள்

[தொகு]

1959ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் நம்பிக்கை சோவியத் யூனியன் தான் மனிதர்களை விண்ணில் ஏவுவதில் முதன்மை பெரும் என்றனர் என் என்றல் அவர்கள் தயாரித்து வந்த மெர்குரி என்ற திட்ட்டம் செயல் பாட்டுக்கு வருவதற்கு மேலும் பல நாள் பிடிக்கும் என்று கருதினர் ஏப்ரல் 12 1961 ஆம் ஆண்டு சோவியத் யுனான் தனது முதல் விண்கலன் ஆனா வோஸ்டாக் -1 விண்ணில் ஏவியது அதில் விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதர் என்ற பெருமை இதன் மூலம் யூரி காகரின் அவர்கட்கு கிடைத்தது .இதன் மூலம் விண்வெளி போட்டியில் முதலில் விண்ணுக்கு சென்றது .சோவியத் யூனியன் என்பது உறுதியாகிறது .ருசியர்கள் காகரின் இந்த சாதனை மூலம் அவரை ரஷ்ய மொழியில் பிரபஞ்சத்தின் முதல் மாலுமி என்று அழைக்கப்பட்டார் . விண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பும் போது விண்கலனின் கட்டுப்பாடு இவரிடம் இருந்த போது இவர் தானியங்கி மூலம் இயக்கும் மறு அதை செய்துவிட்டார் .எச்சரிக்கை கருதி இவர் இதை செய்தார் என்று கூறபடுகிறது .அப்போது இருந்த மருத்துவ அறிவியல் விண்வெளியில் இருக்கும் கனமின்மை காரணமாக மனிதர்களுக்கு என்ன ஏற்பட கூடும் என்பதை கணிக்க முடியவில்லை.வோஸ்டாக் -1 பூமியை 108 நிமிடத்தில் வளம் வந்து பின் சோவியத் யூனியன் திரும்பியது .காகரின் விண்கலம் பூமியில் இருந்து 23000அடியை வந்து அடைந்ததும் .கலனை விடு வெளியேறி பாரசூட் மூலம் தரை இறங்கினார் மே மாதம் 5 ஆம் தேதி 1961 ஆம் ஆண்டு ருசியர்கள் அனுப்பிய காலத்தில் இருந்து சரியாக மூன்று வாரங்களுக்கு பிறகு அமெரிக்காவின் முதல் விண்வெளி பயணம் தொடங்கியது இவர்களது விண்கலனின் பெயர் ப்ரீடம் 7 இது துணை சுற்றுபதை இலக்காக கொண்டு அனுப்பட்டது .இது சுற்றுபாதை சென்று அடியாத போதும் இதன் விண்வெளி வீரர் விண்கலனின் கட்டுப்பாட்டை தான் கட்டுபாட்டில் வைத்து இருந்த முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு .ருசியர்கள் இதன் வோஸ்டாக் இரண்டு விண்கலத்தில் சுகுஸ்ட் 6 1961 ஆம் ஆண்டு க்ஹெர்மன் திடோவ் மூலம் செயல் படுத்தினர் .இதில் இருந்து ஒரு வருடத்திற்கு பிறகு தான் அமெரிக்கர்கள் அனுப்பிய விண்கலம் சுற்றுபதை சென்று அடைந்தது அதில் பயணம் செய்த விண்வெளி வீரர் அலன் ஷெபர்ட் செய்யமுடியாத செயலை முடித்தார் .பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்க வீரர் ஜான் க்லென் பிப்ரவரி 2 1962ஆம் ஆண்டு ஆகும்.விண்வெளி பயன்போடியில் பின்னடைவு கொண்டதாக கருதியது அமெரிக்க இரண்டாவதாக அவர்கள் விண்வெளியில் வீரர்களை செலுத்தியதே இதற்கு காரணம்.ஆகையால் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சியில் இடுபட்டது .ஜூலை மாதம் 1969ஆம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம்1972ஆம் ஆண்டு வரை நிலவுக்கு அமெரிக்க அரசு ஆறு முறை விண்வெளி பயணதிட்டம் மேற்கொண்டது இந்த திட்டத்திற்கு அபோல்லோ என பெயர் இட்டது.இந்த பயன்களில் இது வரை 12மனிதர்கள் பங்கு பெற்று உள்ளனர்.சோவியத் யூனியனும் தனது நிலவுக்கு மனிதர்களை அனுப்பு திட்டத்தை செயல் படுத்த தொடங்கியது அமெரிக்க ஜனாதிபதி கென்னெடி இருந்த போது அமெரிக்காவும் சோவியத் யூனியனும் சேர்ந்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ஒன்று இருந்தது .கென்னெடி மறைவுக்கு பின் அந்த திட்டம் கைவிட பட்டது

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்வெளிப்_போட்டி&oldid=3394591" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy