உள்ளடக்கத்துக்குச் செல்

R

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Rஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

R (ஆர்) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 18ஆவது எழுத்து ஆகும்.[1]

பெயர்

[தொகு]

எவ்வு (F), எல் (L), எம் (M), என் (N) போன்ற எழுத்துகளின் பெயரை ஒத்ததாக, இலத்தீனில் rஇன் பெயர் ஏர் (er) ஆகும்.[2] நடு ஆங்கிலத்தில் இதன் பெயர் ஆராக (ar) மாறியது.

பயன்பாடு

[தொகு]

ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் எட்டாவது எழுத்து r ஆகும்; கூடுதலாகப் பயன்படுத்தப்படும் நான்காவது மெய்யொலியும் (t, n, s ஆகியவற்றுக்கு அடுத்து) r ஆகும்.[3]

கணிதத்திலும் அறிவியலிலும்

[தொகு]

இயற்கணிதத்தில், மெய்யெண்களின் தொடை ℝஆல் குறிக்கப்படும்.[4] வடிவவியலில், ஆரையைக் குறிப்பதற்கும் radius என்பதன் முதலெழுத்தான r பயன்படுத்தப்படுகின்றது.

வேதியியலில், வளிம மாறிலியானது Rஆல் குறிக்கப்படும்.[5]

இயற்பியலில், தடைக்கான குறியீடாக R பயன்படுத்தப்படுகின்றது.[6]

ஒருங்குறியில்

[தொகு]

ஒருங்குறியில் rஐ ஒத்த பின்வரும் வரியுருக்கள் காணப்படுகின்றன.

  • 𝐑𝐫 𝑅𝑟 𝑹𝒓 𝖱𝗋 𝗥𝗿 𝘙𝘳 𝙍𝙧 ℛ𝓇 𝓡𝓻 ℜ𝔯 𝕽𝖗 𝚁𝚛 ℝ𝕣 கணிதக் குறியீடுகளாகப் பயன்படும் ஒருங்குறி வரியுருக்கள்
  • ʀ சிறிய பேரெழுத்து R, சிறுநாக்கொலி உருட்டொலிக்கான (Uvular trill) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • Ꝛ ꝛ சுற்றிய r (r rotunda)
  • Ꞃ ꞃ கேலிய R
  • Ʀ இலத்தீன் எழுத்து YR (U+01A6), விரிவாக்கப்பட்ட இலத்தீன் பீயில் ʀஇன் பேரெழுத்தாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ɹ பன்முகட்டுப் உயிர்ப்போலிக்கான (alveolar approximant) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ɾ பன்முகட்டு வருடொலிக்கான (alveolar flap) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ɻ மேலண்ண உயிர்ப்போலிக்கான (retroflex approximant) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ɽ மேலண்ண வருடொலிக்கான (retroflex flap) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ʁ ஒலிப்புடை பன்முகட்டு உரசொலிக்கான (voiced uvular fricative) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ˞ R-நிற உயிரொலியைக் குறிக்கும் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் கொக்கி ஒலித்திரிபுக் குறி
  • ® பதிவுசெய்யப்பட்ட வணிகக்குறிக்கான குறியீடு
  • ℟ கிறித்தவ வழிபாட்டு முறையில் பதிலுரைக்கான குறியீடு
  • உரூபிள் நாணயக் குறியீடு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "English Alphabet". EnglishClub. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2015.
  2. "Abecedarivm Latinæ-The Latin alphabet". Phonetica Latinæ. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2015.
  3. "English Letter Frequency (based on a sample of 40,000 words)". Cornell University. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2015.
  4. "Common Number Sets". Math is Fun. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Molar gas constant". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  6. R. Nave. "Resistance". HyperPhysics. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
  • பொதுவகத்தில் R பற்றிய ஊடகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=R&oldid=3578409" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy