உள்ளடக்கத்துக்குச் செல்

யுத்தம்

விக்கிமேற்கோள் இலிருந்து
  • எந்தப் போரிலும் முதலில் கொல்லப்படுவது உண்மை.
  • கடைசி நாட்களில் இப்படி நடக்கும்: யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும். எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும். எல்லா தேசத்து ஜனங்களும் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள். அங்கே வருகிற பலதரப்பட்ட ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து, “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம். யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம். அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார். நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள். ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும். ஜனங்களுக்கு அவர் தீர்ப்பு கொடுப்பார். பலதரப்பட்ட ஜனங்களின் விவகாரங்களைச் சரிசெய்வார். அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள். ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள். ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது. போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். - ஏசாயா ஏசாயா 2:2-4
  • ஒரே நேரத்தில் போருக்கும் நாகரிக வாழ்வுக்கும் செலவிட, எந்த ஒரு நாடும் வசதி படைத்தது அல்ல. எதாவது ஒன்றைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும், இரண்டையும் நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.
  • அமைதியை அடைவதற்காக இந்த மண்ணில் எத்தனையோ போர்கள் நடந்துள்ளன.
  • மனிதர்கள் செத்துக் கொண்டிருக்கும்போது, பதக்கங்களால் என்ன பயன்? என்னுடைய நோபல் பதக்கங்களையும் போர் நிதிக்குக் கொடுத்துவிட்டேன்.- மேரி கியூரி
  • பூமி ஓர் அற்புதமான கிரகம், ஆண்களின் பேராசையாலும், அதிகாரப் போட்டியாலும் போர்கள் மூலம் அழிக்கப்பட்டு வருகிறது.-ஆலிஸ் வாக்கர்
  • வலுவான நிலையில் இருக்கும் ஒரு நாடு, பிற நாடுகளின் மீது எந்தக் காரணத்தைச் சொல்லிக்கொண்டும் போரில் இறங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. போர் என்பது வல்லரசுகள் நிகழ்த்தும் ஆயுத வணிகம். மனித வாழ்வில் மோசமான நிகழ்வு.- ஜோடி வில்லியம்ஸ்
  • போரினால் களைத்துவிட்டோம், ஓடுவதில் களைத்துவிட்டோம், உணவு கேட்டுக் களைத்துவிட்டோம், பாலியல் பலாத்காரங்களைக் கண்டு களைத்துவிட்டோம் எதிர்கால குழந்தைகளாவது போர்களற்ற உலகில் வாழ வேண்டுமானால் பெண்களே ஒன்று சேர்வோம் போராடுவோம்.- லேமா குபோவீ
  • இனத்தின் பெயரால் எந்த மனிதரும் இனி சாகக்கூடாது, எந்தக் காரணத்துக்காகவும் இந்தப் பூமியில் போர் நிகழக்கூடாது போர்களில் உயிர் இழந்த கடைசி மனிதர்களாக நாங்கள் இருக்க வேண்டும்.- ஆன் பிராங்க்
  • இரண்டாம் உலகப் போர் கொடூரமானது, நீண்ட போர் மனதை காயப்படுத்திவிட்டது. என்னால் இட்லரின் செயல்களை தடுத்து நிறுத்த இயலவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காவது உதவ இயன்றதே.-எமிலி கிரீன் பால்ச்
  • வியட்நாம் போருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்ததை எதிர்த்து வரி கட்டமறுத்த என்னைக் கைது செய்தனர். அமைதியைத் தொந்தரவு செய்ததற்காக நான் சிறை சென்றேன். உண்மையில் நான் போரைத்தான் தொந்தரவு செய்தேன்.-ஜோன் பயாஸ்
  • இரண்டாம் உலகப்போருக்குப் பின், மனித இனம் பாடம் கற்றுக்கொண்டிருக்கும் என நினைத்தேன், ஆனால் போர்களைத் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையானது. அன்பும் சகிப்புத்தன்மையும் பணிவும் இருந்தால் இந்த உலகம் மேன்மையடையும்.-ஐரெனா செண்டலர்
  • வலுவான நிலையில் இருக்கும் ஒரு நாடு, பிற நாடுகளின் மீது எந்தக் காரணத்தைச் சொல்லிக்கொண்டும் போரில் இறங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. போர் என்பது வல்லரசுகள் நிகழ்த்தும் ஆயுத வணிகம். மனித வாழ்வில் மோசமான நிகழ்வு. ஜோடி வில்லியம்ஸ்[1]
  • பழைய காலத்தில் பைத்தியக்காரர்களைக் குளு குளு தண்ணீரில் குளிக்கச் செய்வது வழக்கம். அதேபோல் செய்தால்தான் இப்போது இருக்கும் யுத்த வெறியர்களின் பைத்தியக்காரத்தனம் நீங்கும். நிக்கிட்டா குருசேவ்-(26 - 6 - 1960)[2]
  • துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும், துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானல் முதலில் அதனை நம் கைகளில் பிடிக்க வேண்டும். —மா சே துங் (1936)[2]
  • உடல் வலிமையை நம்பிப் போர் செய்தவன் கல்லை எடுத்தவனுக்கு தோற்றான். கல்லை நம்பியவன் வில்லை எடுத்தவனுக்குத் தோற்றான்; வில் வாளுக்குத் தோற்றது; வாள் பீரங்கி துப்பாக்கிக்குத் தோற்றது. வெடிகுண்டு அணு குண்டுக்குத் தோற்றது. இனிமேல் அதுவும் அறிவுக்குத் தோற்றுவிடும்! —டாக்டர் மு. வரதராசனார் (1962)[3]
  • யுத்தம் என்பது எந்த மனிதனும் அதன் மூலம் கண்யமாக வாழமுடியாத ஒரு தொழிலேயாகும். அந்த வேலையின் மூலம், ஏதாவது இலாபத்தை அறுவடை செய்கிற போர்வீரன், பொய்மையும், வெறியும், கொடுமையும், உடையவனாக விளங்கவே கடமைப் பட்டிருக்கிறான். -நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
  • எவன் யுத்தம் உண்டாக்குவதையே தன் தொழிலாகக் கொண்டிருக்கிறானோ, அவன் பாபி என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. - யுத்தம், திருடர்களை உண்டாக்குகிறது. சமாதானம் அவர்களைத் தூக்கு மேடைக்கு கொண்டு வருகிறது. -நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
  • உண்மையான தேசப்பற்று என்பது முதலில் ஒட்டுமொத்த தேசத்தின் ஆரோக்கியத்தை காப்பதில் பெருமை கொள்வதே ஆகும். அதன்பின்தான் பொருளாதாரமும், பாதுகாப்புத் துறையும் இருக்க வேண்டும். உடல்நலத்திலும், சுகாதாரத்திலும் அக்கறை இல்லாத நாடு, நமது ராணுவத்தின் வீரத்தையும், ஆற்றலையும் காட்டி போருக்கு தயார் என்று அறை கூவுவது கொலை குற்றத்துக்கு சமம். -கமல்ஹாசன்
    • கரோனா ஊரடங்கின்போது 2020 ஏப்ரலில் கமல் வெளியிட்ட அறிக்கை[5]
  • யுத்தங்களிலே ஒருகாலும் நல்ல யுத்தம் என்பதே கிடையாது. அதே போலத் தீமையான அமைதி என்பதும் கிடையாது. - ஃபிராங்க்லின்[6]
  • தவறானதைத் திருத்துவதற்கு யுத்தம் சிறிதும் ஏற்ற கருவியாயில்லை; அது நஷ்டங்களுக்கு ஈடு பெறுவதற்குப் பதிலாகப் பல மடங்கு நஷ்டங்களைப் பெருக்குகின்றது. - ஜெஃப்பர்ஸன்[6]
  • இராணுவ மயமாக்கும் கொள்கையும், யுத்தமும் குழந்தைத் தனமாக இருக்கின்றன. அதைவிடப் பயங்கரமானவையாகவும் இருக்கின்றன. அவை பழங்கால விஷயங்களாக மறைந்து விட வேண்டும். - எச். ஜி. வெல்ஸ்[6]
  • இரகசியமானாலும் சரி. வெளிப்படையானாலும் சரி. யுத்தம் காட்டுமிராண்டித்தனமான முறையாகும். - மகாத்மா காந்தி[6]
  • மாஷினோ அரண்தான் சீக்ஃபிரீட் அரணுக்கு அவசியத்தை உண்டாக்கியது. - மகாத்மா காந்தி[6]
    • ( இரண்டாவது உலகப் போரில் மாஷினோ அரண் பிரான்ஸ் நாட்டின் கீழ் எல்லையில் அமைந்திருந்தது. அதற்குப் போட்டியாக ஜெர்மனி தன் மேல் எல்லையில் சீக்ஃபிரீட் அரணைக் கட்டியது)
  • பலாத்காரத்தையே நம்பி உபயோகிப்பவன், செக்கு மாட்டினைப் போல, வட்டமாகச் சுற்றிக்கொண்டேயிருப்பான். - மகாத்மா காந்தி[6]
  • அச்சமே முதன்மையான தீமையென்று நான் கருதுகிறேன். ஏனெனில், அச்சத்திலிருந்து பூசலும், பலாத்காரமும் தோன்றுகின்றன. பலாத்காரம் பயத்தின் விளைவு அது போலவேதான் பொய்யும். - ஜவகர்லால் நேரு[6]
  • மனிதன் திருந்துவதால் உலக சமாதானம் வரும் என்பதில்லை. ஆனால், புதிய சூழ்நிலைகள், புதிய விஞ்ஞானம். புதிய பொருளாதார அவசியங்கள் ஆகியவை அமைதியை நிலை நாட்டுபவை. - அனடோல் ஃபிரான்ஸ்[6]
  • போர் திருடர்களை உண்டாக்குகின்றது. அமைதி அவர்களைத் தூக்கில் ஏற்றுகின்றது. - மாக்கிய வில்லி[6]
  • யுத்தங்கள் வரும் பொழுது. அவை பொருளுற்பத்தி செய்யும் பெருவாரியான தொழிலாளர் வகுப்பினர்மீது பாய்கின்றன. அவர்களே துயரத்திற்குள்ளாகின்றனர். - யு. எஸ். கிரான்ட்[6]
  • விளையாட்டுக்கான பொம்மைச் சிப்பாய்களையும் ஒழித்துவிட வேண்டும். குழந்தைகள் வளர்ப்பு நிலையத்திலிருந்து முதலில் ஆயுதங்களை அப்புறப்படுத்துவோம்! - டாக்டர் பாலினா லூய்ஸி[6]
  • யுத்த தளவாடங்களைப் பெருக்க வேண்டுமென்று கூறுவோர்களுக்கு இரக்கப்பட்டு, நாம் அவர்களை மன்னிப்போம். ஏனெனில், அவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம். என்பதை அறியார்கள்: - ஆண்ட்ரூ கார்னேகி[6]
  • மூளையால் வேலை செய்யும் அறிவாளி. சமூகத்தில் செய்ய வேண்டிய வேலை ஏதாவது இருந்தால், அது இதுதான் அவர் பாரபட்சமின்றி, தாமும் உணர்ச்சி வெறி கொள்ளும்படி ஏற்படும் தூண்டுதலை விலக்கிவிட்டு, அமைதியான மனநிலையுடன் இருக்க வேண்டும். போர் நடக்கும் பொழுது, சிக்கனம், பொது சுறுசுறுப்பு. நன்மைக்கு உழைத்தல் போன்ற சாதாரணப் பண்புகள் கூட போரில் அழிவுவேலைகளைப் பெருக்கி, இருகட்சியினரும் ஒருவரையொருவர் வதைத்துக்கொள்ள அதிக ஆற்றலை உண்டாக்கப் பயன்படுத்தப்பெற்றன. - பெர்ட்ரான்ட் ரஸ்லல்[6]
  • ஒரே ஒரு நல்ல பண்புதான் உளது. அதுதான் போர் வெறி; ஒரே ஒரு கெட்ட பண்புதான் உளது. அதுதான் சாந்தியை விரும்புதல், இந்த நிலைதான் போருக்குத் தேவையானது. - பெர்னாட்ஷா[6]
  • போர்கள், போர்களை வழிக்க முடியாது என்பது எனக்கு இப்பொழுது தெரியும். - ஹென்றி.ஃபோர்டு[6]
  • ஐந்து விஷயங்களை எதிர்த்துத்தான் மனிதன் போர் செய்ய வேண்டியது அவசியம்: உடலின் பிணிகளையும், மனத்தின் அறியாமையையும். புலன்களின் உணர்ச்சிகளையும், நகரிலுள்ள அரசாங்கத் துவேஷத்தையும், குடும்பங்களிலுள்ள பிணக்குகளையுமே எதிர்க்க வேண்டியிருக்கின்றது. - யாரோ[6]

குறிப்புகள்

[தொகு]
  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16
  2. 2.0 2.1 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. 4.0 4.1 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. கரோனா வைரஸ் தொற்றை முறியடித்த பின்னர் இந்தியாவை புனரமைப்பது எப்படி? (20 ஏப்ரல் 2020). Retrieved on 20 ஏபரல் 2020.
  6. 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 6.12 6.13 6.14 6.15 6.16 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 307-309. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் யுத்தம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=யுத்தம்&oldid=36638" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy