உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிமெயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிமெயில்
உருவாக்குனர்கூகிள்
இயக்கு முறைமைஅனைத்தும் (இணையம் சார்ந்த செயலி)
மென்பொருள் வகைமைமின் அஞ்சல், வலைத்தள மின்னஞ்சல்
இணையத்தளம்https://mail.google.com/mail/

கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail), இணையம் மற்றும் POP முறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை. சுமார் 3 ஆண்டுகளாகச் சோதனையிலிருந்த இந்த மென்பொருள், தற்போது சோதனைகள் முடிந்து வெளிவந்துள்ளது. இச்சேவை ஐக்கிய இராச்சியத்திலும், ஜெர்மனியிலும் கூகிள் மெயில் என அறியப்படுகின்றது. இது யாகூ! மெயில், வின்டோஸ் லைவ் மெயில் ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது. ஜிமெயிலானது அழைப்புக்களின்றி ஆஸ்திரேலியா, நியூசிலாந்துஇல் ஆகஸ்டு 9, 2006[1] இல் இருந்தும் ஜப்பானில் ஆகஸ்டு 23[2] , 2006 இலிருந்தும் எகிப்தில் டிசம்பர் 5[3], 2006 இருந்தும் ரஷ்யாவில் டிசம்பர் 16, 2006 [4] முதல் இணையமுடியும். உலகின் அனைவருக்கும் காதலர் தினமான 14 பெப்ரவரி 2007 முதல் அனைவரும் ஜிமெயிலை அழைப்பின்றிப் பெற்றுக் கொள்ளலாம் [5] ஜிமெயில் பயனர்கள் அனைவரும் மே 29 2008 முதல் ஜிமெயிலை தமிழ் உட்பட இந்திய மொழி இடைமுகத்துடன் பெற்றுக் கொள்ளலாம் [6]

வரலாறு

[தொகு]

ஜிமெயில், ஏப்ரல் 1, 2004 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப் படுத்தப்பட்ட காலப்பகுதியில் இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏற்கனவே பயன்படுத்துபவரின் அழைப்பிதழ் தேவை. ஆரம்பதித்தில் அமெரிக்காவில் அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் வழியாகவும் வழங்கப்படுகின்றது. சிலர், இச்சோதனை நிலை முடிவடைந்தாலும் கூட, எரிதங்களை (Spam mail) இல்லாதொழிக்க அழைப்பிதழ்கள் மூலமாக மட்டுமே இச்சேவையில் இணைய முடிவதை தொடர வேண்டும் என நம்பினார்கள்[7]

ஜிமெயில் இன்னும் முழுதாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராதபோதும் பெரும்பாலான ஜிமெயில் பயனர்கள் தேவைக்கு மேலதிகமான அழைப்பிதழ்களை வைத்துள்ளனர். ஜிமெயில் பயனர்களுக்கு 0-100 இற்கும் இடையிலான அழைப்புக்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஜப்பான், எகிப்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் நேரடியாக இச்சேவையினைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, துருக்கி, பிலிப்பைன்ஸ் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நகர்பேசியூடாகவும் அல்லது அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் .edu என்று முடிகின்றவர்களும் ஜிமெயிலில் இணைந்து கொள்ளமுடியும்[8]. ஜிமெயில் அழைப்புக்களை பல்வேறு இணையத்தளங்களில் காணமுடியுமெனினும் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரிகளை விற்பது சட்டப்படி பிழையானது.

தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருக்கும் இச்சேவை, மின்னஞ்சல்களைச் சேமித்து வைக்க 6.7 GB 11 மே 2008 அன்றைய நிலவரப்படி) இடத்தை தற்போது வழங்குகிறது. தொடக்கத்தில், 1 GB அளவாக இருந்த சேமிப்புத் திறன் முட்டாள்கள் நாளான ஏப்ரல் 1, 2005 முதல், ஜிமெயிலின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக 2 GB ஆக கூட்டப்பட்டது. ஆரம்பத்தில் இதன் வளர்ச்சிவீதம் கூடுதலாகவே இருந்தது. இதன் தற்போதைய வளர்ச்சி விகிதம் நாளுக்கு 3.348 மெகாபைட் ஆகும்.

ஜிமெயில் ஏஜாக்ஸ்ஸை மிகப்பெருமளவில் பாவிக்கின்றது (பயன்படுத்துகின்றது). தற்கால உலாவிகளின் ஜாவாஸ்கிரிப்ட் முறையைப் பயன்படுத்தி சிறந்த பயனர் அனுபவத்தைத் தருகின்றது. இதற்கு இன்டநெட் எக்ஸ்ப்ளோரர் 5.5, பயர்பாக்ஸ் 0.8+, மொஸிலா அப்ளிக்கேசன் ஸ்யூட் 1.4+, சவாரி 1.2.1+, நெட்ஸ்கேப் 7.1+, ஒபேரா 9+, உலாவிகள் அவசியம். பழைய உலாவிப் பதிப்புகளில் இன்ரநெட் எக்ஸ்ளோளர் 4.0+, நெட்ஸ்கேப் 4.07+, ஒபேரா 6.03+ அடிப்படை HTML பார்வையைத்தரும்[9]. ஜிமெயில் நகர்பேசிகளில் WAP முறையிலும் அணுகக்கூடியது.

ஏப்ரல் 12, 2006 முதல் கூகிள் காலண்டர் சேவையையும் ஒருங்கிணைத்துக் கொண்டது.

ஜிமெயிலின் அந்தரங்கத் தன்மை[10] (Privacy policy) குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன. ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகள் அழிக்கப்பட்ட பின்னரும் சிறிது காலத்திற்கு இவை பேணப்படும். இது மட்டுமன்றி பொதுப் பாதுகாப்பிற்காக மின்னஞ்சல் படிக்கக் கூடக் கொடுக்கப்படும்.[11].

ஜிமெயிலின் வசதிகள்

[தொகு]

உரையாடற் பார்வைகள்

[தொகு]

ஏனைய மின்னஞ்சல்கள் போன்றல்லாது ஜிமெயில், மறுமொழிகளை உரையாடற் பார்வையில் வைத்திருக்கும்[12] இப்புதிய புரட்சிகரமான சிந்தனையானது மின்னஞ்சல்களுக்கு ஓர் ஒழுங்குடன் விடையளிப்பதை இலகுவாக்கியுள்ளது. இதை கூகிள் செயற்படுத்தும் விதம் முற்றும் சரியெனக் கூறமுடியாதெனினும் இது சிறந்ததொரு முறையாகும். சிலசமயங்களில் மின்னஞ்சல் தலைப்பை மாற்றும் போது உரையாடல்கள் பிரிந்துவிடுகின்றன. சில சமயங்களில் தொடர்பில்லாத உரையாடல்கள் ஒன்று சேர்ந்து விடுகின்றன. அண்ணளவாக 100க்கு மேற்பட்ட உரையாடல்கள் இருப்பின் அவை இரண்டாக்கப்படும்; சில சமயங்களில் பல துண்டுகளுமாக்கப்படும். இச்சேவை தொடங்கப்பட்டபோது, ஓர் உரையாடலின் ஒரு மின்னஞ்சலை அழித்தபோது முழு உரையாடலும் அழிந்துவிடும் எனினும், Trash This Message எனும் பொத்தான் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இக்குறை சரிசெய்யப்பட்டுவிட்டது.

அடைவுகளுக்குள் வைப்பதை விடுத்து மேலொட்டு இடுதல்

[தொகு]

அடைவுகளினுள் மின்னஞ்சல்களை வைத்தல் என்னும் நடவடிக்கையில் ஒரு படி மேலே போய் மேலொட்டு[13]. (label) இடுதல் என்னும் நடவடிக்கையை ஜிமெயில் பயனர்கள் மேற்கொள்ள முடியும். ஏனெனில் ஒரு மின்னஞ்சல் பல மேலொட்டுக்களை கொண்டிருக்கலாம்; ஆனால், அடைவுகளுள் போட்டால் ஒரு மின்னஞ்சலை ஒரு அடைவில் மட்டும் தான் போடமுடியும். ஜிமெயிலில் குறித்த ஒரு மேலொட்டு உள்ள எல்லா மின்னஞ்சல்களையும் ஓரே நேரத்தில் பார்வையிடமுடியும். அத்துடன் இந்த மேலொட்டை கொண்டு மின்னஞ்சல்களைத் தேடவும் முடியும். ஜிமெயில் பயனர்கள், பிற மின்னஞ்சல் சேவைகளில் அடைவுகளில் போடும் முறையைப் போலவே இங்கும் மேலொட்டுகளை கையாளலாம். ஏனைய மின்னசல்களைப் போலவே இதுவும் மின்னஞ்சல்களை வடிகட்ட (filter) உதவும்.

தானாகவே சேமிக்கும் வசதி

[தொகு]

உலாவிகளின் பிழை அல்லது மின்சாரத் தடை போன்றவற்றில் இருந்து உங்கள் மின்னஞ்சல்களைப் பாதுகாக்க நிமிடத்திற்கு ஒருமுறை தானாகவே சேமித்துக் கொள்ளும். மின்னஞ்சலில் இணைப்புகள் ஏதும் இருப்பின் அவற்றையும் தானாகவே சேமித்துக் கொள்ளும். ஜிமெயில் நிமிடத்திற்கு ஒருமுறை சேமிக்க முயலுமெனினும் மின்னஞ்சலின் அளவைப் பொறுத்து சேமிக்கும் நேரமானது மாற்றமடையும்.Ctrl+S (ஆப்பிள் கணினிகளில் Cmd+S) மூலமும் சேமிக்கலாம்.[14]

விசைப்பலகை குறுக்குவழிகள்

[தொகு]

சொடுக்கி (mouse) வழியாக அன்றி விசைப்பலகை வழியாகவும் ஜிமெயிலை பயன்படுத்தமுடியும். இந்தவசதிகளை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் விசைப்பலகைக் குறுக்குவழிகளைப் பார்க்கவும்

விருப்பதிற்கேற்ப புள்ளிகள்

[தொகு]

ஜிமெயில் பயனர் பெயர்கள் யாவும் ஆறில் இருந்து முப்பது வரை (ஆறும் முப்பதும் உட்பட) எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் புள்ளிகளால் மாத்திதிரமேயானவை. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புள்ளிகளையிட்டுக் கொள்ளலாம். அதாவது ஜிமெயில் புள்ளிகளைக் கணக்கில் கொள்ளாது. அதாவது நீங்கள் விரும்பிய வண்ணம் புள்ளிகளைச் சேர்க்கவே இல்லாமற் பண்ணவோ இயலும். உதாரணமாக google@gmail.com எனும் மின்னஞ்சலானது goo.gle@gmail.com, g.o.o.g.l.e@gmail.com போன்ற எல்லாக் கணக்குகளிருந்தும் மின்னஞ்சலைப் பெற்றுக்கொள்ளும். எனினும் பயனர் கணக்கொன்றைப் புள்ளிகளுடன் உருவாக்க விரும்பினால் கணக்கை தொடங்கும் போதே புள்ளியை தர வேண்டும்.

எனவே புள்ளிகளால் மாத்திரம் மாறுபடும் பயனர் கணக்கை தொடங்க அனுமதிக்காது. எடுத்துக்காட்டுக்கு, john.doe@gmail.com, johndoe@gmail.com எனும் இரண்டு பயனர்களை எடுத்துக் கொண்டால் இரண்டு பயனர்களும் மற்ற பயனருக்கு வரும் மின்னஞ்சல்களைப் பெற்றுக் கொள்வர். (இப்பிரச்சினை ஜிமெயிலின் தொடக்கத்திலேயே ஏற்பட்டது.)

+ முகவரிகள்

[தொகு]

ஜிமெயில் + முகவரிகளை ஆதரிக்கும். அதாவது மின்னஞ்சல்கள் ஜிமெயில்பயனர்+மேலதிகசொற்கள்@gmail.com இங்கே மேலதிகசொற்கள் எதுவாகவும் இருக்கலாம்.

கூகிள் டாக்குடன் கூட்டிணைவு

[தொகு]

கூகிள் டாக் ஜபர் வலையமைப்பூடாக ஏனைய இணைப்பிலுள்ளவர்களுடன் நிகழ்நிலையில் உரையாட முடியும். கூகிள் டாக் உட்பட ஜபர் தொழில் நுட்பத்தை ஆதரிக்கும் வலையமைப்புக்களுடன் தொடர்பிலிருக்கமுடியும் (ஜிஸ்மோ திட்டம், Psi, Miranda IM மற்றும் iChat). வார்தைகளூடான நிகழ்நிலை உரையாட்களையே நிகழ்த்தமுடிவதோடு ஆக்கக்க்கூடியது 4 பேருடன் மாத்திரமே ஒரே நேரத்தில் உரையாடலை நிகழ்த்த முடியும். ஒலியூடான அழைப்புக்கள் கூகிள் டாக்கின் ஓர் குறிப்பிடத்தக்க வசதியாகும்.

2006ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஒலியஞ்சல்[15] வசதியானது சேர்க்கப்பட்டது. இணைய இனைப்பொன்றை நிகழ்நிலையில் இல்லாத பயனர் ஒருவரிற்கு மின்னஞ்சல் ஊடாக ஒலியஞ்சலை அனுப்ப இயலும். கிடைக்கின்ற ஒலியழைப்புக்களை ஜிமெயிலில் சுட்டியிட்டுச் சேமித்துக் கொள்ளும். இது கூகிள் டாக்கைக் கணினியில் நிறுவாத பயனர்களுக்கு உதவுவதற்காகும். இன்னுமோர் வசதியானது கூகிள் டாக்கை கணினியில் நிறுவிய பயனர்கள் ஜிமெயிலில் இருந்தவாறே ஒலியழைப்புக்களை மேற்கொள்ளலாம். ஆயினும் இது கூகிள் டாக்கைக் கணினியில் நிறுவி அழைப்பை இணையமூடாக மேற்கொண்ட பயனருக்கே உதவும்.

ஜிமெயில் உரையாடல்களை ஜிமெயிலில் ஆவணப்படுத்த முடியும்.

ஜிமெயில் தொடர்புப் படங்கள்[16] மற்றும் ஜிமெயிலில் ஒலியோசைகளைச் சேர்துக் கொண்டு உரையாடல்களில் ஈடுபடலாம்.

ஜிமெயில் உரையாடல் இல்லாத சாதாரண பார்வையொன்றையும் வழங்கும். இதுவே சாதாரணமாக உரையாடல் இன்றிய சாதாரண பார்வையாகும்.

கூகிள் காலண்டருடன் கூட்டிணைவு

[தொகு]

ஏப்ரல் 13, 2006 கூகிள் காலண்டர் சேவையானது ஆரம்பிக்கப்பட்டது. இது பயனர்களுக்கு பல நாட்காட்டிகளை (காலண்டர்களை) உருவாக்கப் பயன்பட்டது. அதில் appointments போன்றவற்றைச் சேமித்து பிரத்தியேகப் பாவனைக்கோ அல்லது குறிபிட்டவர்களுடன் பகிரவோ அல்லது முற்றுமுழுதாக எல்லாரும் பார்கக்கூடியதாக இணையத்திலோ வைக்கலாம்.

இது முற்று முழுதாக ஜிமெயிலுடன் சேமிக்கப்படக்கூடியதுடன் மின்னஞ்சலை எழுதும்போதே நிகழ்வுகளைச் சேமித்துக் கொள்ளலாம். ஜிமெயிலைப் பாவிப்பவர்கள் இதற்கான அழைப்பைப் பெற்றுக் கொள்வார்கள் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ இயலும். மேலும் ஜிமெயில் மின்னஞ்சலிலுள்ள முகவரிகள் மற்றும் திகதி போன்ற விடயங்களைப் அறியமுயன்று பயனர்களுக்கு காலண்டரில் அந்நிகழ்வைச் சேமிப்பதற்கு உதவும்.

வடிகட்டுதல்

[தொகு]

ஏனைய மின்னஞ்சல் சேவைகளைப் போலவே வருகின்ற மின்னஞ்சல்களை அவை யாரிடமிருந்து வருகின்றன, யாருக்கு வருகின்றது, என்ன விடயமாக வருகின்றன, ஏதாவது இணைக்கப்பட்ட கோப்புக்கள் உள்ளனவா என்பவற்றை வைத்து ஜிமெயிலானது வடிகட்டும். ஜிமெயில், ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நடவடிக்கைகளைக் கையாண்டு இதை நிறைவேற்றும். ஆவணப்படுத்தல், மேலொட்டிடுதல், குப்பைத் தொட்டிக்குள் அனுப்புதல், மற்றோர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளையும் செய்யலாம்.

தேடுதல்

[தொகு]

ஜிமெயிலை கீழ் வரும் அடிப்படைகளைக் கொண்டு தேடலாம்.

  • மின்னஞ்சல் உரை மற்றும் அல்லது பொருள்
  • ஏதேனும் சொல்லைக் கொண்டுள்ளதா இல்லையா
  • மின்னஞ்சல் யாரிடமிருந்து வந்தது அல்லது யாருக்கு அனுப்பப்பட்டது
  • மின்னஞ்சல் இருக்கும் இடம் (அனைத்து மின்னஞ்சல்கள், பெற்ற மின்னஞ்சல்கள், நட்சத்திரக் குறியிடப்பட்டவை, அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள், குப்பைத்தொட்டியில் உள்ளவை, வாசிக்கப்பட்ட அஞ்சல்கள், வாசிக்கப்படாத அஞ்சல்கள்)
  • குறிப்பிட்ட திகதிக்குள் வந்த அஞ்சல்கள்

தொடர்புகள்

[தொகு]

ஜிமெயில், ஒரு மின்னஞ்சலை அனுப்பும் போதே அனுப்பப்படும் முகவரியைத் தானாகவே சேமித்துவிடும்[17]. ஒரு மின்னஞ்சலை அனுப்பும்போது பெயரில் ஏதேனும் மாற்றங்களிருப்பின் அதனையும் தானாகவே செய்து கொள்ளும்.

ஜிமெயில், பயனர் அனுப்பும் முகவரி, நகல் சென்று சேரும் முகவரி, மறை நகல் அனுப்பப்படும் முகவரி போன்றவற்றில் தட்டச்சிட தொடங்கும் போது அதனுடன் தொடர்புடைய முகவரிகளைக் காட்டும்[18]. சிறிய கூகிளின் தேடலானது மிகவும் திறன் வாய்ந்ததன்று எனினும் பெயர் மற்றும் பிரதான மின்னஞ்சல் முகவரிக்ளைத் தேட உதவும். எனினும் இது சிறந்த இலகுவான இடைமுகத்தையே தருகின்றது.

ஜிமெயிலின் தானாகவே சேமிக்கும் வழக்கத்தினால் ஒவ்வோர் மின்னஞ்சலிற்கும் உரியவர் யார் எனக் கண்டுபிடிக்காது ஒவ்வோர் பயனரை உருவாக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் உடையவர்களிற்கு இது ஜிமெயில் தொடர்புகளைத் தேவையற்ற விதத்தில் அதிகரிக்கும். ஜிமெயில் பயனர்கள் தொடர்புகளுக்குப் போய்த் தொடர்புகளை மேம்படுத்தவும் முடியும். யாகூ மெயில், ஹொட்மெயில், யூடோறா, அவுட்லுக் மேலும் பல மின்னஞ்சற் சேவைகளில் காற்புள்ளியினால் வேறுபடுத்தப்பட்ட கோப்பு முறையில் தொடர்புகளைச் சேமிக்ககூடிய எல்லா மின்னஞ்சல்களிலிருந்தும் தொடர்புகளை இங்கே பெற்றுக் கொள்ளலாம். ஜிமெயிலில் இருந்தும் காற்புள்ளியினால் வேறுபடுத்தப்பட்ட கோப்பு முறையில் தொடர்புகளை ஏற்ற முடியும்.

அண்மையில் குழுத்தொடர்புகள் என்னும் வசதியானது அறிமுகப் படுத்தப்பட்டது. இம்முறையில் மேலொட்டுக்கள் மூலமாக ஒரு குழுவிற்கு மின்னஞ்சல்கள் அனுப்பமுடியும்[19].

உலகளாவிய மொழிகளுக்கான ஆதரவு

[தொகு]

ஜிமெயில் தற்போது தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இடைமுகத்தை அளிக்கின்றது. அரபு, பல்கேரிய, கற்றலன், குரோத்தியன், செக், டெனிஸ், டச்சு, எஸ்தோனிய, பினிஷ், பிரெஞ்சு, ஜேர்மன், கிரேக்கம், ஹீபுறு, ஹிந்தி, ஹங்கேரியன், ஐஸ்லாந்திக், இந்தோனேசிய, இத்தாலிய, ஜப்பானிய, கொரிய, லத்விய, லித்துவேனிய, போலிஷ், போத்துக்கீசிய, உரோமானிய, ரஷ்ய, சேர்பிய, இலகுவாக்கப் பட்ட சீனம், ஸ்லோவாக், ஸ்லோவேனியன், ஸ்பானிய, ஸ்சுவீடிஸ், ராகாலொக், தாய், சம்பிரதாய சீனம், துருக்கி, பிரித்தானிய ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம், உக்ரேனிய, வியட்நாமிய மொழிகளில் இடைமுகமானது வெளிவந்துள்ளது.[20] எனினும் புதுப்புது வசதிகள் ஜிமெயிலில் அறிமுகம் செய்யப்படுவதால அமெரிக்க ஆங்கிலத்திற்கு இணையாக உடனடியாக ஏனைய மொழிகளில் அறிமுகப் படுத்தப்படுவதில்லை. இம்மொழிபெயர்ப்புக்கள் யாவும் தன்னார்வலர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சி கூகிள் உங்கள் மொழியில்[தொடர்பிழந்த இணைப்பு] (Google in your language) என்றழைக்கப்படுகின்றது.

ஜிமெயின் தமிழாக்கப் பணிகள் டிசெம்பர் 2005 அளவில் முடிவடைந்தன.[21] பின்னர் கூகிள் அவ்வப்போது சொற்களைச் சேர்த்ததாலும் தமிழாக்கத்தில் ஈடுபடுவோரின் ஒருங்கிணைவு இன்மையாலும் அதாவது சொற்களைத் தமிழாக்கியவர்களின் விபரங்களை ஜிமெயில் வெளிவிடாததாலும் மைக்ரோசாப்ட் கலைச் சொல்லாக்தில் ஈடுபட்டோரை இணையமூடாகக் கௌரவித்தது[22] போன்று கூகிள் நடந்து கொள்ளாமையினாலும் ஜிமெயில் தமிழில் இன்னமும் வெளிவரவில்லை.

செய்தியோடை படிப்பான்

[தொகு]

ஜிமெயிலின் ஓராண்டு நிறைவை அடுத்து, பக்கத்தின் மேல் ஒரு வரியில் செய்தியோடைகளினூடு பெறப்படும் தகவல்களை காண்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனர் திறந்து பார்வையிடும் மின்னஞ்சலில் காணப்படும் சொற்களுக்கு பொருத்தமான செய்தியோடைத்தகவல் எழுந்தமானமாக காண்பிக்கப்படும். இந்தத் தேர்வானது இப்போது எல்லா ஜிமெயில் கணக்குகளில் காணப்படுகின்றது, இது வலைத்துண்டு (web clip) என்று அழைக்கப் படுகின்றது.

இணைப்புக்கள்

[தொகு]

ஆரம்பத்தில் 10 MB அளவிலான இணைப்பு (Attachment) வசட்தியினை வழங்கிய ஜிமெயில் ஆதரிக்கின்றது 22 மே, 2007 முதல் 20 மெகாபைட் இடவசதியாக இணைப்பு அளவை இருமடங்காக்கிக் கொண்டது. எனினும் பல மின்னஞ்சல் சேவை வழங்குனர்கள் இன்றளவும் 10 மெகாபடை அளவிலான இணைப்பளவையே ஆதரிப்பதால் வேறுசேவை வழங்குனர்களிற்கு அனுப்பப்படும் மின்னஞ்சல் 10 மெகாபைட் வரையிலான இணைப்புக்களை இணைப்பதே பொருத்தமானது.[23] 20 மெகாபைட் இணைப்பு அளவெனினும் பிரச்சினைகள் ஏதுமின்றி உரியவரிடம் சேர்பதற்காக 17மெகாபைட் வரையிலான இணைப்பைச் சேர்ப்பதே உசிதமானது என கூகிள் குறிப்பிட்டுள்ளது.[24] விண்டோஸில் இயங்கும் .exe கோப்புக்களை ஆதரிக்காது. இக்கோப்பானது சுருக்கப்பட்ட zip, .tar, .tgz, .taz, .z, .gz கோப்புக்களில் இருந்தால் கூட அனுமதிக்காதெனினும்[25] கோப்பின் நீட்சிப்பெயரை மேற்குறிப்பிட்ட நீட்சிகள் அல்லாமல் எடுத்துக்காட்டாக .book என மாற்றினால் அனுமதிக்கும்.

ஜிமெயிலை அணுகுதலும் பயனர் பெயரைப் பயன்படுத்தலும்

[தொகு]

POP3 முறையில் ஜிமெயிலைப் பெறுதல்

[தொகு]
ஜிமெயிலைப் POP முறையில் அணுக

ஆரம்பத்தில் இவ்வசதி வழங்கப்படாத போதும் பாதுகாப்பான POP3 (over SSL) முறையில் மின்னஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளவும் இலகுவான மின்னஞ்சலைப் பரிமாறும் முறையில் en:SMTP மின்னஞ்சல்களை அனுப்பவும் முடியும். சில பயனர்கள் ஜிமெயிலை மேற்கண்ட முறையில் அணுக முயன்று முடியாமற் போனபோது கூகிளைக் குற்றம் சாட்டியபோதும் உண்மையிலேயே பெரும்பாலும் விருப்பத் தேர்வொன்றைத் தேர்ந்தெடுக்காமையினாலேயே இப்பிரச்சினை நிகழ்ந்தது.

POP3 தேர்வுகள் ஜிமெயிலானது SSL (Secured Socket Layer) என்கின்ற ஓர் பாதுகாப்பான முறையிலேயே மின்னஞ்சல்களைப் பரிமாறும்
pop server: pop.gmail.com
port: 995
smtp server: smtp.gmail.com
port: 465

இம்முறைமூலம் அநேகமான மின்னஞ்சல் மென்பொருட்களினூடக ஜிமெயிலைப் பெறமுடியும்.[26]

POP3 முறையில் ஏனைய மின்னஞ்சலைகளை ஜிமெயிலிற்குப் பெறுதல்

[தொகு]

இதுவரை காலமும் ஏனையவர்களின் மின்னஞ்சல்களை pop3 முறையில் பிறிதோர் இணையமூடான மின்னஞ்சலுக்குப் பெறுவதற்கு யாகூ! மெயிலிலேயே மாத்திரமே சாத்தியமாக இருந்ததெனினும்[27] டிசம்பர் 5, 2006 முதல் ஜிமெயிலிலும் இந்த வசதி யாகூவைப் பின்பற்றி அறிமுகம் செய்யப்பட்டது.[28]

விருப்பதிற்குரிய அனுப்புபவரின் முகவரி

[தொகு]

ஜிமெயில் நீங்கள் விரும்பிய முகவரியூடாக மின்னஞ்சல் அனுப்புவதை ஆதரிக்கும். இதற்கு உங்களின் மின்னஞ்சல்தான என்பதை உறுதிப்படுத்த ஓர் மின்னஞ்சலை அனுப்பும் இதை உறுதிப்படுத்தியதும் நீங்கள் விரும்பிய மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஜிமெயிலூடாக மின்னஞ்சல் அனுப்பலாம்.[29]

டொமைன்களுக்கான ஜிமெயில்

[தொகு]

பெப்ரவரி 10, 2006 இல் இருந்து டொமைன்களுக்கான ஜிமெயில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஜிமெயிலின் சேவையை அவர்களின் டொமைனூடகப் (Domain) பெற்றுப் பாவிக்கும் முறையானது ஜிமெயிலைப்போலவே இதும் ஓர் சோதனையிலேயே இருக்கின்றது. இது விண்டோஸ் மெயில் கஸ்டம் டொமைன்ஸ் (http://domains.live.com/ பரணிடப்பட்டது 2013-11-08 at the Portuguese Web Archive) உடன் போட்டியிடுகின்றது.

கூகிள் மெயில்

[தொகு]
  • ஜூலை 4, 2005 - ஜிமெயில் ஜேர்மனியில் கூகிள் மெயில் என மீள் பெயரிடப்பட்டது. அன்றிலிருந்து IP முகவரியூடாக எவராவது ஜேர்மனில் இருந்து வருபவராக இருந்தால் அவர் googlemail.com இணையத்தளத்திற்கு மீள்வழிநடத்தப்படுவார். அவர்களின் மின்னஞ்சலானது @gmailemail.com ஐக் கொண்டிருக்கும். யாராவது ஜேர்மன் பயனர்கள் @gmail.com என்றவாறு மின்னஞ்சலைப் பெறவேண்டும் என்றால் அவர்கள் வேறு ஓர் நாட்டில் உள்ள புறொக்ஸி (Proxy) சேவரூடாகச் செய்து கொள்ளலாம். இத்திகதிக்கு முன்னர் சேவையைப் பெற்றுக் கொண்டவர்கள் அச்சேவையினைத் தொடரலாம்.
  • அக்டோபர் 19, 2006 இல் ஐக்கிய இராசியத்தில் இன்னுமோர் நிறுவனத்தூடான வர்தக இலச்சினைப் பிரச்சினை தீராததால் [30] கூகிள் மெயில் என வர்தக சின்னத்தினை மாற்றிக் கொண்டபோதும் அவ்விணையத்தளத்தின் இலச்சினையானது இன்னமும் ஜிமெயில் என்றவாறே காட்சியளிக்கின்றது. ஏற்கனவே @gmail.com என்றவாறான மின்னஞ்சலைப் பெற்றுக் கொண்டவர்கள் இதனால் பாதிப்படைய மாட்டார்கள். புதிதாக @gmail.com என்றவாறான முகவரிகளைப் பெறுவதற்கு பிறிதோர் நாட்டிலுள்ள புறொக்ஸி (Proxy) சேவரைப் பயன்படுத்தலாம்.
  • குறிப்பு: @googlemail.com என்னும் முகவரிக்கோ அல்லது @gmail.com என்ற முகவரிக்கோ அனுப்பினாலும் ஒரிவரிற்கே மின்னஞ்சல் செல்லுமெனினும் இது யாஹூ! மெயில் இன்னமும் சாத்தியம் இல்லை .[31] எடுத்துக்காட்டக umapathyxp@gmail.com என்றவாறோ அல்லது umapathyxp@googlemail.com என்றவாறு மின்னஞ்சல் அனுப்பினால் உமாபதியைச் சென்றடையும்.

போட்டி

[தொகு]

ஜிமெயில் சேவையானாது அறிமுகப் படுத்தப் பட்டதும் பல வேறுபட்ட மின்னஞ்சல் சேவையினை வழங்குபவர்கள் தமது வாடிக்கையாளர்கள்த் தம்முடனேயே வைத்துக் கொள்ள சேமிப்பு அளவினைக் கூட்டிக் கொண்டர். எடுத்துக் காட்டாக ஹொட்மெயில் பாவனையாளர்கள் 2 மெகாபைட் அளவிலான இடவசதியில் இருந்து 25 மேகாபைட் இடவசதிக்கும் பின்னர் 250 மெகாபைட் இடவசதியையும் அளித்தனர். விண்டோஸ் லைவ் மெயில் தற்போது 5 ஜிகாபைட் அளவிலான இடவசதியை அளிக்கின்றது. இதற்கு ஹெட்மெயிலைவிட்டு ஜிமெயிலிற்குப் பயனர்கள் மாறுவதே காரணமாகும்[32]. யாஹூ!வும் யாஹூ! மெயிலை 4 மெகாபைட்டில் (இந்தியாவில் 6 மெகாபைட்டில்) இருந்து 100 மெகாபைட்டிற்கும் பின்னர் 250 மெகாபைட்டிற்கும் அதிலிந்து 1 ஜிகாபைட்டிற்கும் சேமிப்பு அளவைக் கூட்டிக் கொண்டனர். அத்துடன் யாஹூ!மெயில் 2007 மே முதல் எல்லையற்ற செமிப்பளவைத் தருவதாகவும் அறிவித்து அதை வெற்றிகரமாகச் செயற்படுத்தியும் உள்ளனர்.[33] இடைமுகத்தைப் பொறுத்தவரை யாஹூ!மெயிலே சிறந்த ஏஜாக்ஸ் இலான கவர்ச்சிகரமான இடைமுகத்தை தனது பீட்டாப் பயனர்களுக்கு வழங்குகின்றது.

ஜிமெயில் பயனர்கள் 6 மாதங்களாகப் பயன்படுத்தப்படாத கணக்குகள் மூடப்படும் அதன் பின்னர் 3 மாதத்தின் பின்னர் இவை மீளப்பாவிக்கப்படும். அதிலுள்ள மின்னஞ்சல்கள் யாவும் அழிக்கப்படும். போட்டியாளர்களான யாகூ! மெயில் இதனிலும் பயன்படுத்தாத கணக்குகளை மூடுவதற்கு இதனிலும் குறைவான காலத்தையே கொண்டுள்ளன. யாகூ! 4 மாதம் பாவிக்காத கணக்குகளையும் ஹெட்மெயில் 1 மாதம் பயன்படுத்தாத கணக்கையும் மூடிக் கொள்ளும்.

இடவசதியைத் தவிர இதன் போட்டியாளர்களான யாகூ! மெயில், விண்டோஸ் லைவ் மெயில் போன்றவற்றின் இடைமுகத்திலும் ஜிமெயிலின் வருகையை அடுத்துப் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஜிமெயிலின் இணைப்பு அளவான 10 மெகாபைட் அளவினை யாகூ! மெயில் ஹொட்மெயில் ஆகியனவும் பின்பற்றின. ஏஜாக்ஸ் இடைமுகத்தில் யாகூ! மெயில் பீட்டா மற்றும் விண்டோஸ் லைவ் மெயில் ஆகியன வடிவமைக்கப்பட்டுள்ளன.

இன்றளவும் உலகில் கூடுதலான பயனர்கள் பாவிக்கும் மின்னஞ்சலாக யாஹூ!மெயிலே விளங்குகின்றது. இதில் தற்சமயம் 2007 ஆம் ஆண்டின்படி 250 மில்லியன் பயனர் கணக்குகள் உண்டு. இது தவிர விண்டோஸ் லைவ் மெயிலைப் 226 மில்லியன் பயனர்கள் பாவிக்கின்றனர். ஜிமெயில் 51 மில்லியன் பயனர் கணக்குகள் உண்டு.[34] யாஹூ!வே இன்னளவும் அதிகூடிய நெரிசலான இணையத்தளமகவுள்ளது [35]

விருதுகள்

[தொகு]

PC World இதழின் 2005 ஆம் ஆண்டில் 100 சிறந்த மென்பொருட்களில் [36] இது இரண்டாவதாக பயர்பாக்சுக்கு அடுத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் இடைமுகத்திற்கான பெருமைக்குரிய விருதும் வழங்கப் பட்டது. இதிலுள்ள மிகையான இடவசதியினால் பயனர்களிடம் இருந்து சார்பான கருத்துக்கள் கிடைத்தது.

வெளியிணைப்புக்கள்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  1. ஆஸ்திரேலியா நியூசிலாந்தில் அழைப்பில்லாமல் இணைதல், அணுகப்பட்டது. நவம்பர் 19, 2006 (ஆங்கில மொழியில்)
  2. ஜப்பானில் அழைப்பின்றி ஜிமெயில் கணக்கை ஆரம்பித்தல் அணுகப்பட்டது நவம்பர் 20, 2006 (ஆங்கில மொழியில்)
  3. எகிப்தில் உள்ள எல்லாரிற்கும் ஜிமெயில் அணுகப்பட்டது. டிசம்பர் 9, 2006 (ஆங்கில மொழியில்)
  4. ரஷ்யாவிலும் அழைப்பின்றி ஜிமெயில் அணுகப்பட்டது ஜனவரி 1, 2007 (ஆங்கில மொழியில்)
  5. ஜிமெயில் கணக்கு உருவாக்க இனி அழைப்பு வேண்டாம் ரவியின் வலைப்பதிவு அணுகப்பட்டது 25 பெப்ரவரி 2007 (தமிழில்)
  6. தமிழில் Gmail பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் நிமலின் வலைப்பதிவு அணுகப்பட்டது 31 மே 2008 (தமிழில்)
  7. ஜிமெயிலை அழைப்பில்லாமலே நகர்பேசி இல்லாமலோ இணையமுடியுமா? பரணிடப்பட்டது 2006-11-18 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது நவம்பர் 20, 2006 (ஆங்கில மொழியில்)
  8. கூகிள் பல்கலைக்கழகங்களுக்கான அழைப்புக்கள்ள் பரணிடப்பட்டது 2008-05-15 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது நவம்பர் 20, 2006 (ஆங்கில மொழியில்)
  9. ஜிமெயிலை ஆதரிக்கும் உலாவிகள் அணுகப்பட்டது நவம்பர் 20, 2006 (ஆங்கில மொழியில்)
  10. ஜிமெயிலின் அந்தரங்கத் தன்மை அணுகப்பட்டது நவம்பர் 20, 2006
  11. ஜிமெயிலின் குறைகள் அணுகப்பட்டது நவம்பர் 20, 2006 (ஆங்கில மொழியில்)
  12. உரையாடற் பார்வை பரணிடப்பட்டது 2007-02-04 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது நவம்பர் 20, 2006 (ஆங்கில மொழியில்)
  13. உரையாடற் பார்வை அணுகப்பட்டது நவம்பர் 20, 2006 (ஆங்கில மொழியில்)
  14. ஜிமெயிலை எழுதும் போது சேமித்தல் அணுகப்பட்டது நவம்பர் 20, 2006 (ஆங்கில மொழியில்)
  15. ஒலியஞ்சல் அணுகப்பட்டது நவம்பர் 20, 2006 (ஆங்கில மொழியில்)
  16. தொடர்புப் படங்கள் பரணிடப்பட்டது 2006-12-07 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது நவம்பர் 20, 2006
  17. தொடர்புப் பட்டியல்கள்[தொடர்பிழந்த இணைப்பு] அணுகப்பட்டது நவம்பர் 20, 2006 (ஆங்கில மொழியில்)
  18. ஜிமெயிலில் தானாகவே முகவரிகளை முடித்தல் எவ்வாறு வேலை செய்கின்றது அணுகப்பட்டது நவம்பர் 20, 2006 (ஆங்கில மொழியில்)
  19. தொடர்புக் குழுவை ஜிமெயிலில் உருவாக்கல் அணுகப்பட்டது நவம்பர் 20, 2006 (ஆங்கில மொழியில்)
  20. ஜிமெயில் ஆதரவளிக்கும் மொழிகள் (ஆங்கில மொழியில்)
  21. ஜிமெயில் தமிழில் பரணிடப்பட்டது 2006-10-26 at the வந்தவழி இயந்திரம் பாஷாஇந்தியா இணையத்தள விவாதம், அணுகப்பட்டது நவம்பர் 20, 2006 (தமிழில்)
  22. மைக்ரோசாப்ட் தமிழ்க் கலைச் சொல்லாக்கத் திட்டம் பரணிடப்பட்டது 2006-12-12 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது நவம்பர் 21, 2006 (ஆங்கில மொழியில்)
  23. ஜிமெயில் இணைப்பு அளவினை இருமடங்காக்கியுள்ளது அணுகப்பட்டது 4 ஜூன், 2007 (ஆங்கில மொழியில்)
  24. ஜிமெயில் இணைப்பு அளவு அணுகப்பட்டது நவம்பர் 21, 2006 (ஆங்கில மொழியில்)
  25. விண்டோஸில் தானகவே இயங்கும் கோப்புக்களை இணைக்கலாமா? அணுகப்பட்டது நவம்பர் 21, 2006 (ஆங்கில மொழியில்)
  26. ஜிமெயிலை மின்னஞ்சல் மென்ன்பொருட்களூடாகப் பெறுதல் அணுகப்பட்டது நவம்பர் 20, 2006
  27. யாகூ! மெசன்ஜரை உலாவியூடாக கூட்டிணைக்கின்றது கட்டுரையின் இறுதியைப் பார்க்கவும். பீட்டாநியூஸ், அணுகப்பட்டது நவம்பர் 20, 2006 (ஆங்கில மொழியில்)
  28. வேறு சேவைவழங்குனர்களின் மின்னஞ்சலை ஜிமெயிலிற்குப் பெறுதல் அணுகப்பட்டது டிசம்பர் 9, 2006, (ஆங்கில மொழியில்)
  29. விருப்பத்திற்குரிய அனுப்புபவரின் மின்னஞ்சல் முகவரி பரணிடப்பட்டது 2007-07-04 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது நவம்பர் 21, 2006 (ஆங்கில மொழியில்)
  30. கூகிள் மெயிற் பெயர்க் காரணம் அணுகப்பட்டது நவம்பர் 21, 2006 (ஆங்கில மொழியில்)
  31. s it possible to delive irrespective of @yahoo.com, @yahoo.co.in etc?[தொடர்பிழந்த இணைப்பு] அணுகப்பட்டது 10 மார்ச் 2007 (ஆங்கில மொழியில்)
  32. அரைவாசிப்பெர் ஹாட்மெயிலில் இருந்து ஜிமெயிலிற்கு மாறுகின்றார்கள் பீட்டாநியூஸ் அணுகப்பட்டது நவம்பர் 21, 2006, (ஆங்கில மொழியில்)
  33. யாஹூ!மெயில் எல்லையற்ற சேமிப்பு அளவு பற்றிய அறிவிப்பு அணுகப்பட்டது மார்ச் 29, 2007 (ஆங்கில மொழியில்)
  34. யாஹூ!மெயில் ஜிமெயில் லைவ்மெயில் ஒப்பீடு அணுகப்பட்டது மார்ச் 29, 2007 (ஆங்கில மொழியில்)
  35. அலெக்ஸா.காம் இல் முதலாவதாக யாஹூ! பரணிடப்பட்டது 2009-08-09 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது மார்ச் 29 2007 (ஆங்கில மொழியில்)
  36. PC World சஞ்சிகையின் 2005 ஆம் ஆண்டில் 100 சிறந்த மென்பொருட்களில் பரணிடப்பட்டது 2008-05-17 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது நவம்பர் 18, 2006 (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிமெயில்&oldid=3909366" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy